சமரச பேச்சு வார்த்தை தோல்வி

வங்கித் தனியார்மயத்திற்கெதிராக 2021 டிசமபர் 16. 17 நடை பெறவுள்ள வங்கித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒட்டி தொழிற்சங்கங்கள், இந்திய வங்கிகள் சங்கம், ஒன்றிய அரசு பிரதிநிதிகளுக்கிடையே கூடுதல் முதன்மை தொழிலாளர் ஆணையர் முன்பாக டெல்லியில் டிசம்பர் 8ம் தேதி சமரசப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஒன்றிய அரசோ, இந்திய வங்கிகள் சங்கமோ வங்கித் தனியார்மயத்தை கைவிடுவது பற்றி எந்தவிதமான உறுதி மொழியும் வழங்காததால் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் 14ஆம் தேதிக்கு சமரச பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தை தோல்வியுற்றதால் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு  அறிவித்துள்ளது.

Comment here...