கட்டுரையாளர்:மாதவராஜ்
அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ( All India Regional Rural Bank Employees Association) 14 வது மாநாடு டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் அசாம் மாநிலத்தில், கௌஹாத்தியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் “அனைத்து கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து தேசிய கிராம வங்கி உருவாக்க வேண்டும்” என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கிராம வங்கிகளில் பணிபுரியும் ஆபிஸர்களுக்கு National Federation of Regional Rural Bank officers (NFRRBO) என்ற அமைப்பும், ஊழியர்களுக்கு National Federation of Regional Rural Bank Employees (NFRRBE) என்ற அமைப்பும் உள்ளடக்கிய சங்கமாக AIRRBEA இயங்கி வருகிறது.
தேசம் முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து 23 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 11ம் தேதி காலை 10 மணிக்கு பெண் ஊழியர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. தமிழநாட்டிலிருந்து தோழர் இந்துமதி விவாதங்களில் பங்கேற்றார்.
காலை 12 மணிக்கு AIRRBEA-வின் தலைவர் தோழர் ராஜீவன் கொடியேற்ற மாநாடு துவங்கியது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வைத்த விவசாயிகளின் கூட்டு இயக்கங்களில் முக்கிய பங்காற்றிய தோழர் விஜூ கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்தார்.
விவாசயிகள் போராட்டத்தின் வெற்றியையும், போராட்டத்தின் நிகழ்வுகளையும், விவசாயிகளின் உறுதியையும் பகிர்ந்து கொண்டார். கிராம வங்கி உழியர்களின் கோரிக்கையான National Rural Bank of India என்பது இந்திய விவசாயிகளின் கோரிக்கையுமாகும் என்றார்.
மதியம் 4 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. AIRRBEA பொதுச்செயலாளர் தோழர் வெங்கடேஸ்வர் ரெட்டி, NFRRBO பொதுச்செயலாளர் தோழர் சையீதுகான், NFRRBE பொதுச்செயலாளர் தோழர் ஷிவ்கரன் த்விவேதி அறிக்கையை சமர்ப்பித்தனர். தொடர்ந்து மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
டிசம்பர் 12ம் தேதி காலை யில் பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தமிழ்நாட்டிலிருந்து தோழர் லூர்து ஆரோக்கியராஜும், தோழர் அஸ்வத்தும் பிரதிநிதிகள் விவாதங்களில் பங்கேற்றனர்.
தேசிய கிராம வங்கி உருவாக்குவது, கிராம வங்கிகளில் அரசின் பங்குகளை ஸ்பான்சர் வங்கிகளிடம் வழங்குவதை எதிர்ப்பது, பொதுத்துறை வங்கிகளை/நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசின் கொள்கையை எதிர்ப்பது, தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வது, மத்திய அரசின் National Monetization Pipeline திட்டத்தை கைவிட வலியுறுத்துவது, மத சகிப்பின்மை, தீவிரவாதம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றை எதிர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய அளவில் கிராம வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்காக செயல்பட்டு வரும் National Federation of Regional Rural Bank Retirees Sangam (NFRRBRS ) அமைப்பையும் AIRRBEA வுடன் இணைப்பதையொட்டி அமைப்பு விதிகளின் திருத்தங்களை மாநாடு ஏற்றுக்கொண்டது.
மதியம் பொதுச்செயலாளர்களின் தொகுப்புரைகளுக்குப் பின் அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. புதிய மத்தியக்குழுவுக்கும் அதன் பொறுப்பாளர்களுமான தேர்வு நடைபெற்றது. தோழர் ராஜீவன் President ஆகவும், தோழர் வெங்கடேஸ்வர் ரெட்டி அவர்கள் Secretary General ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து AIRRBEAவுக்கு தோழர் அண்டோ கால்பர்ட் ( Working President – TNGBOA) Organising Secretary ஆகவும், தோழர் அஸ்வத் (GS-TNGBWU) AGS ஆகவும், தோழர் சோலைமாணிக்கம் (TNGBRS) Joint Secretary ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். தோழர் அறிவுடைநம்பி (GS – TNGBOA) CC மெம்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். விண்ணதிரும் முழக்கங்களுடன் மாநாடு நிறைவுற்றது.
தமிழ்நாட்டிலிருந்து AIRRBEA வின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட தோழர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💪
On Sat, Dec 18, 2021, 12:57 PM Bank Workers’ Unity wrote:
> Bank Workers Unity posted: ” கட்டுரையாளர்:மாதவராஜ் அகில இந்திய கிராம வங்கி
> ஊழியர்கள் சங்கத்தின் ( All India Regional Rural Bank Employees Association)
> 14 வது மாநாடு டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் அசாம் மாநிலத்தில்,
> கௌஹாத்தியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் “அனைத்து கிராம வங்கிகளைய”
>