அரசு வங்கிகளைப் பாதுகாப்போம்

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன்

ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வர முயற்சித்தது. வங்கித் தொழிலாளர்களின் வீரம் செறிந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் (2021 டிசம்பர் 16,17) போராட்டத்தின் காரணமாக அரசு பின் வாங்கியுள்ளது. இருப்பினும் அபாயம் நீங்க வில்லை. இந்த பின்னணியில், அரசு வங்கிகள் மற்றும், தனியார் நிறுவனங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வது அவசியம். அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அரசு வங்கிகள்தனியார் வங்கிகள்
12 பொதுத்துறை வங்கிகள்22 தனியார் வங்கிகள், 3 பிரதேச
தனியார் வங்கிகள், 10 சிறிய தனியார் வங்கிகள், 7 பேமெண்ட் வங்கிகள், 46 வெளிநாட்டு வங்கிகள்.
அரசு வங்கிகளில் உள்ள மொத்த
பங்குகளில் மத்திய அரசின் பங்கு
51%க்கு குறையாமல் இருக்க
வேண்டும் என்பது சட்டம். எனவே
மத்திய அரசின் முழு உத்தரவாதம்
உள்ளதால் திவாலாகாது
1947 முதல் 1969 வரை 559 தனியார் வங்கிகள் திவாலாகி மக்களின் வைப்புத் தொகை பெருமளவில் பறிபோனது, 1969க்கு பிறகு 38 தனியார் வங்கிகள் திவாலாகின
அரசு வங்கிகளில் போடப்படும் வைப்பு தொகைக்கு முழுமையான பாதுகாப்பு உண்டுதனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஒரு கணக்குதாரருக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டிஐசிஜிசி காப்பீட்டு பாதுகாப்பு உண்டு.
மொத்த கிளைகளில் 33% கிளைகள் கிராமப்புறங்களில் உள்ளனமொத்த கிளைகளில் 15% கிளைகள் மட்டுமே கிராமப்புறங்களில் உள்ளன
அரசு வங்கிகள் நாட்டின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்கு பெருமளவில் நிதி ஆதாரம் வழங்குகின்றனதனியார் வங்கிகள் நாட்டின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்கு அநேகமாக நிதி வழங்குவதில்லை.
எந்தவித பிணையில்லாமல், சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை குறுந்தொழில் கடன், ரூ. 3 லட்சம் வரை விவசாயக் கடன், ரூ. 4 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.அவ்வாறு வழங்கப்படுவதில்லை
மொத்த கடனில் 40% வரை ஏழை மக்களுக்கான முன்னுரிமைக் கடனாகவும், அதில் 18% விவசாயக் கடனுக்காக உள் ஒதுக்கீடும்  வழங்கப்படுகிறது.அப்படி ஒரு வரையறை இல்லை. முன்னுரிமைக் கடன் வழங்கும்  நிறுவனங்களின் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
ஏழை மக்களுக்கான 44.17 கோடி பிரதம மந்திரி ஜன்தன் கணக்குகளில் 42.89 கோடி கணக்குகள் (97.1%) பொதுத்துறை வங்கிகளால்  திறக்கப்பட்டிருக்கின்றன.ஏழை மக்களுக்கான 44.17 கோடி பிரதம மந்திரி ஜன்தன் கணக்குகளில் 1.28 கோடி கணக்குகள் (2.9%) மட்டுமே தனியார் வங்கிகளால்  திறக்கப்பட்டிருக்கின்றன
ஊரடங்கு காலத்தில் ஜன்தன் கணக்குகள் மூலமாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 31000 கோடியில், சுமார் ரூ.30000 கோடி அரசு வங்கிகளால்  வழங்கப்பட்டன.ஊரடங்கு காலத்தில் ஜன்தன் கணக்குகள் மூலமாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 31000 கோடியில், சுமார் ரூ.1000 கோடி மட்டுமே தனியார் வங்கிகளால்  வழங்கப்பட்டன.
வங்கித்துறையின் மொத்த வியாபாரத்தில் அரசு வங்கிகளின் பங்கு சுமார் 65% அளவிற்கு இருந்தாலும், மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 94%ஐ தனனகத்தே கொண்டுள்ளன.வங்கித்துறையின் மொத்த வியாபாரத்தில் தனியார் வங்கிகளின் பங்கு சுமார் 35% அளவிற்கு இருந்தாலும், மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 6%ஐ மட்டுமே தனனகத்தே கொண்டுள்ளன
அரசு வங்கிகளில் அதிக பட்சமாக வசூலிக்கப்படும் வட்டி 12.5% ஆகும்.தனியார் வங்கிகளில் அதிக பட்சமாக வசூலிக்கப்படும் வட்டி 26% ஆகும்
அரசு வங்கிகள் வெளிப்படைத்தன்மை படைத்தவை. இவை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்பட்டவை. அரசு வங்கிகளின் மீது அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.தனியார் வங்கிகள் வெளிப்படைத்தன்மை இல்லாதவை. தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்படாதவை. தனியார் வங்கிகள் மீது அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.
அரசு வங்கிகளின் உயர் அதிகாரிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள்தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்புக்கு உட்படாதவர்கள்
அரசு வங்கிகளில் பணி நிரந்தரம் உள்ளது.தனியார் வங்கிகளில் பணி நிரந்தரம் கிடையாது
அரசு வங்கிப் பணியாளர்கள் நியமனத்தில் தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரர், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கான இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுகிறதுதனியார் வங்கிப் பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை

மக்களின் வாழ்வு மேம்பட அரசு வங்கிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

9 comments

 1. தனியார் வங்கிகள் மேல் தட்டு மக்களுக்கு மட்டும் உதவும். அவர்களின் நோக்கம் வங்கி நஷ்டம் அடைந்தால் பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து விடுவார்கள். சமீப நாட் களில் பெயரே இல்லாத கம்பெனிக்கு கடன் வழங்கி திவால் ஆன தனியர்வங்கிகள். பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே பொது மக்கள் சேமிப்பு பாதுகாப்பக இருக்கும்.

 2. தனியார் வங்கிகள் தனியார் வளத்தை முன்னிலை படுத்துகின்றன. தேசிய வங்கிகள் நாட்டு நலனை முன்னிலை படுத்துகின்றன.சமூக மேம்பாட்டுக்கு தனியார் வங்கிகள் பங்களிப்பு இல்லை என்பதால் அவற்றை ஆதரிக்க கூடாது

 3. Public sector banks should not be privatised. One of the main reasons for bank nationalisation in 1969 was to safeguard the money deposited by the public. Public sector banks has been the main source of economic development in our country.
  With the introduction and implementation of Financial Inclusion, the public sector banks alone through various schemes has contributed to the maximum for uplifting the downtrodden particularly reaching the people below poverty line.
  Being a banker, I firmly believe that privatisation of PSBs will definitely have an impact on our country’s economy and we should be united at every moment to thwart the move of the union govt.
  Unity is the need of the hour which should be our priority to support and safeguard the public in general and bank employees in particular.
  SAY NO PRIVATISATION & SAVE PUBLIC SECTOR BANKS…. BANKERS UNITY ZINDABAD

 4. தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை பற்றிக் கூறவில்லையே! பாஸ்புக், ஸ்டேட்மெண்ட் என்று எடுத்ததற்கு எல்லாம் கட்டணம் வசூலிப்பார்கள். பொதுத்துறை வங்கிகளில் பல கிளைகளில் வாடிக்கையாளர் கூட்டம் நடத்தப்படுகிறது. தனியார் வங்கிகளில் இப்படி வாடிக்கையாளர்களை மதிப்பார்களா?

 5. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட ஆட்சியாளர்களை நினைத்து. தெரிந்தே தான் செய்கிறார்கள்.அவர்களின் முகமூடி அணிந்த நடவடிக்கைகளை மக்களும் ஊழியர்களும் ஒன்றுபட்டு நின்று முறியடிக்கும் விதமாக செயல் பட வேண்டும். ஒன்று படுவோம் தடுத்து நிற்போம்…ரவீந்திரன்

 6. பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு
  பெரிதும் உதவும்.

  பொதுத்துறையை
  பாதுகாப்போம்.
  நாட்டை பாதுகாப்போம்.

 7. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கும்போது.இதன் கேடு ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.மக்கள் நலன் சார்ந்த அரசாக இல்லயே.மக்களும் ஊழியர்களும் ஒன்றுபட்டு நின்று இதை தடுக்க வேண்டும்.ஒன்று பட்ட போராட்டம் வெற்றியை தரும். கோடி கைகள் போராடி கோரிக்கைகள் வென்று எடுக்கட்டும்.வாழ்த்துக்கள்.வெல்லட்டும் இந்த போராட்டம்.ரவீந்திரன்

 8. Public sector bank always better than private sector banks…
  Good comparisons of PSU and private…

Comment here...