டி.ரவிக்குமார்
இன்னொரு ஆண்டு கடக்கிறது
இன்னொரு ஆண்டு பிறக்கிறது
எண்ணற்ற கனவுகளை தாங்கி
எங்கோ ஒரு விடியலைத் தேடி
உருண்ட ஓராண்டு முடிவிற்கு வருகிறது
மீண்டும் ஒரு விடியலைத் தேடி
கழுத்தளவு தத்தளிக்கும் மக்களை
முற்றிலும் மூழ்கடிக்க
கொரோனா தொற்று இரண்டாண்டுகளாய்
ஆட்டமிட்டு வருகின்றது.
விஷக்கிருமிகளும், இயற்கை இடர்களும்
பாமர மக்களுக்கு மட்டும்தான் போலும்.
முடங்கிக் கிடந்த ஈராண்டிலும்
முதல் நூறு இந்திய பணக்காரர்களின்
சொத்து மட்டும் 50 சதவீதம் உயர்வு
புள்ளி விவர வரைபடங்கள் மின்னுகின்றன
அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல்
அலைமோதி கிடைத்த வழிகளிலெல்லாம்
ஊர் சேர ஓடிய கூட்டத்தின் நிழல் படங்கள்
கண்களை இன்னும் பணிக்கின்றன
இப்படியே போய் விடாது எங்கள் வாழ்க்கை
புதியதோர் உலகம் நிச்சயம் காண்போம்
கடந்த ஆண்டு நிகழ்வுகள் கனவுகளாய் கரையும்
உதிக்கும் ஆண்டு நமதாய் மலரும்
வாழ்த்து கூறி எங்கள் பட்டாளம் புறப்பட்டு விட்டது
நாமும் கலப்போம் இந்த வாழ்த்து மழையில்
“எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ”