23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம்

விலை உயர்வைக் கட்டுப்படுத்து! மக்களுக்கு நிவாரணம் வழங்கு!

கட்டுரையாளர்:ஜேப்பி

ஒன்றிய அரசின் தொடர்ச்சியான மோசமான கார்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளும், கொரோனா பெருந்தொற்றும், திடீர் அகில இந்தியக் கதவடைப்பும், லட்சக்கணக்கான உழைப்பாளிகளின் வேலை இழப்பு, கூலி இழப்பு, பசி பட்டினிக்குக் காரணம்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு

அரசு கடைபிடிக்கும் கொள்கைகளின் விளைவால் ஏற்படுகின்ற அரிசி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இடைவிடா விலை உயர்வு ஏற்கனவே வருமானத்தை இழந்து தவிக்கும் மக்களிடம் இருப்பதையும் தட்டிப் பறிக்கிறது. 

பம்ப்செட் மற்றும் டிராக்டர்களுக்கு பயன்படுத்தப்படும் டீசல் விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டு உள்ளனர். ஒரு புறம் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட, மறுபுறம், பொது மக்கள் -தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளில் பெரும் பகுதியினர் தாங்கள் தயாரித்த, விளைவித்த அதே பொருட்களை அதிக விலைக்கு சந்தையில் இருந்து  வாங்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்வு

மானிய வெட்டு (ரூ. 22,635 கோடியாக இருந்த மானியம் ரூ.3,559 கோடியாக குறைந்துள்ளது) மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மத்திய கலால் வரி, பிற வரிகள் காரணமாக. சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த வரிகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 55 முதல் 58 சதவீதம். 2014-15 முதல் பெட்ரோலியப் பொருட்களின் வருவாய் 138 சதவீதம் அதிகரித்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை

அரசின் நலத்திட்டங்களுக்கும், தடுப்பூசி திட்டத்திற்கும் பணம் தேவைப்படுவதால் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று அரசு முன்வைக்கும் வாதம் போலியானது.  கார்ப்பரேட் வரிகளைக் குறைத்ததன் மூலம், பல்வேறு வரி விலக்குகள் மற்றும் சலுகைகள் மூலம் மோடி அரசுக்கு வருடா வருடம் ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கார்ப்பரேட் வரி விகிதத்தை 2019க்கு முந்தைய நிலைக்கு கொண்டு சென்றால், மத்திய கலால் வரிகளை திரும்பப் பெறுவதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய முடியும். பெரும் பணக்காரர்கள் மீது சொத்து வரி விதிப்பதன் மூலம் போதுமான வருவாய் ஈட்ட முடியும்.

எனவே,

  • 14 அத்தியாவசியப் பொருட்களை பொது விநியோக முறையின் (PDS)  இன் கீழ் கொண்டு வா
  • உணவு தானியங்களில் ஊக-எதிர்கால வாணிகத்தை தடை செய்
  • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைத்து  உண்மையான விலையை நடைமுறைப்படுத்து
  • கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அரசாங்க செலவினங்களை அதிகரி
  • அரசு நிறுவனங்கள் மூலம் அனைத்து ஏழை மக்களுக்கும் இலவச கல்வி
  • மற்றும் சுகாதார சேவைகளை வழங்கு
  • வருமான வரி வரம்புக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.7500
  • உணவு மற்றும் வருமான உதவி வழங்கு

0.10 சதவீத பெரும் கார்ப்பரேட்டுக்கு ஊழியம் செய்யும் பேரழிவு கொள்கைகளை கை விட்டு, 99.90 சதவீதத்தினர் பயனடையும் கொள்கைகளை உருவாக்குக என்று பிப்ரவரி 23-24 வேலை நிறுத்தம் வாயிலாக இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் கோருகிறது.

Comment here...