விடுபட்ட கோரிக்கைகளை விரைவாக முடித்திடுக

யுஎப்பியு கடிதம்

கட்டுரையாளர்: டி.ரவிக்குமார்

வங்கி ஊழியர் ஊதிய உயர்விற்கான புதிய ஒப்பந்த்தம் 01.11.2017லிருந்து செயல்பாட்டிற்கு வர வேண்டிய சூழ்நிலையில் அதற்கான முதல் சுற்று பேச்சு வார்த்தை 02/05/2017 அன்று வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்திற்கிடையே நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின் சார்பில் முழு கோரிக்கை பட்டியல் 05.06.17 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கோரிக்கைப் பட்டியலில் சம்பள உயர்வு தொடர்பானவை தவிர ஊழியர் பணிநிலை முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளும் இடம் பெற்றிருந்தன.

சுமார் 40 கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு 22.07.2020 அன்று புதிய ஊதிய உயர்விற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு 11.11.2020 அன்று புதிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அனைத்து சுற்று பேச்சு வார்த்தைகளிலும் கலந்து கொண்டிருந்தாலும், சிறப்பு அலவன்சை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது, ஓய்வூதியம் மேம்படுத்துல், குடும்ப ஓய்வூதியத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையான உயர்வு, வாரம் ஐந்து நாட்கள் வேலை ஆகிய கோரிக்கைகளைப் பற்றி ஒப்பந்தத்தில் எந்த குறிப்பும் இல்லாததாலும், செயல்பாட்டு திறனுடம் இணைந்த ஊக்கத்தொகை ஊழியர் நலன்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்ற காரணத்தினாலும் BEFI சங்கம்

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தவிடவில்லை. பிற பேசுவார்த்தை சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு ஏற்றுக் கொண்டன. ஊதிய உயர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துவிட்டாலும், இந்த பேச்சுவார்த்தையை ஒட்டி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதானமானதாக வைத்திருந்த கீழ்கண்ட கோரிக்கைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை.

 • வாரத்திற்கு 5 நாட்கள் வேலை
 • பென்சன் திட்டத்தில் முன்னேற்றம்
 • 1986 க்கு முன்னர் பணி ஓய்வு பெற்றவர்களுக்கான கருணைத் தொகையில் முன்னேற்றம் மற்றும்
 • ஓய்வு பெற்றவர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான கட்டண தொகை குறைப்பு
 • அனைத்துவகை பென்சன் பயனாளிகளையும் 6352 பஞ்சப்படி புள்ளிகளுடன் இணைத்து, ஒரே திட்ட்டமாக சீரமைப்பது,
 • ஊழியர் நலத்திட்டங்களுக்கான செலவினங்களுக்கு தொகை ஒதுக்குவதில் முன்னேற்றம்:
 • மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்து அலவன்ஸில் முன்னேற்றம்
 • அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான பணி நேரம்

ஆகிய விடுபட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேச்சு வார்த்தை
சங்கங்களுக்கும் இந்திய வங்கிகள் சங்கத்திற்குமிடையே 10.12.2020 மற்றும் 04.01.2021 ஆகிய நாட்களில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதே போல் பென்சன் திட்டம் பற்றி பேச்சுவார்த்தை 22.07./21 அன்று நடைபெற்றது. இதற்குப் பிறகும் இந்த கோரிக்கைகளில் முன்னேற்றமில்லாத நிலைமையை சுட்டிக் காட்டி, இவற்றை உடனடியாக பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கக் வலியுறுத்தி வங்கிகள் சங்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இவையல்லாமல் இருதரப்பு பேச்சு வார்த்தையின் இடையிலேயே ஊதிய உயர்வு தவிர்த்து பிற கோரிக்கைகளை விவாதிக்க இருதரப்பினிடையே குறுங்குழு உருவாக்கப்பட்டு 8 சுற்றுகள் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பல்வேறு கோரிக்கைகளில் ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளன. அதில் செயலாக்கப்படாமல் இருக்கும் கோரிக்கைகள் பற்றியும் இறுதி முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

One comment

 1. பேச்சு வார்த்தை வெல்லட்டும்.
  1.வங்கியில் பணி புரிவோர் எண்ணிக்கை குறைப்பு .
  2.தற்போதைய பணியாளர்களுக்கு பதில் Contract பணியாளர் சேர்ப்பு.
  3. தேவைக்கு தன் விடுப்பை எடுக்க முடியாமல் திண்டாடும் ஊழியர்கள்.
  4. கட்டாய பிரேவிலேஜ் லீவ் கொடுப்பது.

  போன்ற கோரிக்கைகளையும் சேர்த்து கேட்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்

Comment here...