க்ரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டி 40% க்கு மேல்

கட்டுரையாளர்: ஸ்ரீனிவாசன்

நீங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு புதியவராக இருந்தால், அவை ஆபத்தானவை என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் பணப்பையில் கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு நடப்பது, திடீரென்று நீங்கள் வளர்ந்துவிட்டதாக உணர வைக்கும். உங்களுக்கு வாங்கும் சக்தி கூடி விட்டதாய் உலகுக்குச் சொல்லும். ஆனால் நீங்கள் முதன்முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், “இலவசப் பணம்” என்ற மயக்கம் ஒரு தலைசிறந்த பொறியாக இருக்கலாம்.

உங்கள் கார்டை ஸ்வைப் செய்வது என்பது நீங்கள் உண்மையில் வாங்கக்கூடியதை விட அதிகமாக செலவழிக்க வழிவகுக்கும். பிறரை கவர நீங்கள் ஒரு வாழ்க்கை முறையை சித்தரிக்க முயற்சிக்கும்போது, அது அடிக்கடி நிகழ்கிறது. எனவே, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வரவுசெலவுத் திட்டத்தைச் செய்ய முடிவு செய்வதற்கு முன், சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

உங்கள் செலவு முறைகளையும், கடன் பொறுப்புகளையும் உங்களால் கையாள முடியுமா என்பதையும் பகுப்பாய்வு செய்யுங்கள். அதன் பிறகுதான் நீங்கள் கிரெடிட் கார்டை கையாள வேண்டும். மேலும் நீங்கள் பல கிரெடிட் கார்டுகளைக் பயன்படுத்துபவா் என்றால், அந்த செலவுகள் அனைத்தையும் கண்காணிப்பது உங்களை மேலும் பல சிக்கல்களில் மூழ்கடித்துவிடும்.

கிரெடிட் கார்டு உபயோகிப்பதன மூலம் கடன் பொறியில் சிக்குவதற்கான உண்மையான ஆபத்து உள்ளது. கிரெடிட் கார்டு என்பது கடனைத் தவிர வேறில்லை. வங்கிகள் அபராதம் மற்றும் கூடுதல் வட்டி மூலமாக பணம் சம்பாதிக்கின்றன. பணம் செலுத்துவதில் நீங்கள் பின்தங்கியவுடன், கடனின் தவறான சுழற்சியில் முடிவடைவது மிகவும் எளிதானது. ஜனவரி 16 ஆம் தேதி உங்கள் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பில்லிங் சுழற்சி ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி இருக்கும். எனவே, பிப்ரவரி 15 ஆம் தேதி வங்கி உங்களுக்கு அறிக்கையை அனுப்புகிறது. மேலும், கட்டணம் செலுத்தப்படுவதற்கு வழக்கமாக இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும். நீங்கள் 45 நாட்களுக்கு வட்டியில்லா கடனைப் பெறுகிறீர்கள்.

பணம் செலுத்துவதற்கு உங்கள் வங்கியின் போர்ட்டலில் உள்நுழையும்போது, ​​’குறைந்தபட்ச நிலுவைத் தொகை’ என்று ஒன்று இருப்பதைக் காணலாம். பொதுவாக, அதுவே பல சந்தர்ப்பங்களில் முதல் விருப்பமாக உயர்த்தி காட்டப்படுகிறது. பொதுவாக நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தில் இது 5% என்பதால் இந்த தொகை குறைவானதாகத் தெரிகிறது. எனவே நீங்கள் அதை மட்டும் செலுத்தி மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்.

ஆனால்… வங்கியில் நீங்கள் செலுத்த வேண்டிய மீதிப் பணம் என்னவாகும்? சரி, அந்தத் தொகைக்கு உங்களுக்கு வட்டி விதிக்கப்படும். அதுவும் வருடத்திற்கு 40% க்கு கூடுதலான வட்டி விகிதத்தில்! அதற்குப் பிறகு நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் வட்டி வசூலிக்கப்படும். உங்கள் வட்டியில்லா கடன் சலுகைகளை நீங்கள் முற்றிலும் இழந்து விடுவீர்கள். நீங்கள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் தொடர்ந்து செலுத்தினால், வங்கிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை கணிசமாக அதிகரிக்கும். குறைந்தபட்ச நிலுவைத் தொகை   என்பதன் அர்த்தம் இப்போது மிகவும் தெளிவாக புரிகிறதா?.

ஒவ்வொரு கிரெடிட் கார்டு உரிமையாளருக்கும் ஒரு குறிப்பிட்ட வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வரம்பு ரூ. 1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு, குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டுமே கட்டுவதன் காரணமாக அது மீறப்படும்போது, அது கிரெடிட் ஸ்கோரிங் நிறுவனங்களுக்கு மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். நீங்கள் தற்செயலாக பணம் செலுத்தத் தவறினால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மற்றொரு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வங்கியில் நீங்கள் கல்விக் கடன் அல்லது வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, ​​ உங்களைக் பாதிக்கும். கிரெடிட் கார்டுகள் ஏடிஎம்களில் பணம் எடுக்க கண்டிப்பாக இல்லை!

உங்கள் டெபிட் கார்டைத் தள்ளிவிட்டு, கிரெடிட் கார்டுடன் மட்டும் சுற்றித் திரிந்தால் என்ன செய்வது? உங்களுக்கு அவசரநிலை வந்தால், உங்கள் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து பணம் எடுக்க ஏடிஎம்முக்குச் செல்லலாம், இல்லையா? அதை செய்யாதீா்! ஏனெனில் கிரெடிட் கார்டுகளில் பணம் எடுப்பது, மிகவும் விலை அதிகம் கொடுப்பதில் முடியும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பணத்தை எடுக்கும்போது மதிப்பில் 2.5-3% “பண முன்பணக் கட்டணம்”வசூலிக்கபடும்.

மிக முக்கியமாக, உங்களுக்கு வட்டி இல்லாத காலம் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது சரி. உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் பணத்தை எடுக்கும்போது, ​​30%க்கும் அதிகமான வருடாந்திர வட்டி விகிதம் உங்களுக்கு விதிக்கப்படும். நீங்கள் வரவு செலவுத் திட்டத்திற்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது பெரிய மனிதனை போல உணர பயன்படுத்துகிறீர்களா என்பதை மனதில் கொள்ளவும். இப்போது புரிகிறதா ஏன் எல்லா வங்கிகளும் க்ரெடிட் கார்டு அறிமுகப்படுத்த துடிக்கின்றது என்று?

Comment here...