பதைபதைப்பு

சக்திஸ்ரீ

கொதித்த உலை மேனியில் படர்ந்திட
சொற்கள் யாவும் கணைகளாய் துளைத்திட
பொறுப்பை உணர்ந்து
நெருப்பில் உழன்று
உயிர் நுனியும் பாரம் சுமந்து
செத்து மடிகையில்
வராத பதைபதைப்பு
பட்டம் பெற்று
உயர பறக்கையில்
முந்தியடிக்கிறது பெண் என்பதால்.

One comment

  1. சுளீர் வரிகள். திரும்பவும் வாசித்தால் மனதை குமையும் கருத்து..‌.

Comment here...