சி.பி.கிருஷ்ணன்
“தனியார் வங்கிகளே சிறந்து செயல்படுகின்றன” என்று ஆட்சியாளர்களாலும், ரிசர்வ் வங்கியின் சில உயர்மட்ட அதிகாரிகளாலும், சில ஊடகங்களாலும் தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி தனியார் வங்கிகள் என்னதான் சாதிக்கின்றன?
உதாரணத்திற்கு சமீபத்தில் நெருக்கடியை சந்தித்த யெஸ் வங்கியை
பார்க்கலாம்.
பெரிய விளம்பரத்துடன் 2004ல் துவக்கப்பட்டது யெஸ் வங்கி. நாடு முழுவதும் கால் பரப்பியது. 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் 1,100 க்கும் மேலான கிளைகள், 20000 பணியாளர்கள், இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு தொகை. ஐந்தாவது பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்தது. இந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் தான் வங்கி துவக்கப்பட்ட நாளிலிருந்து 2019 ஜனவரி வரை – 15 வருட காலம் – தலைமைப் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். தனியார் வங்கிகளில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருக்கலாம். இதுதான் ஊழலின் ஆரம்பம்.
600 கோடி ரூபாய் லஞ்சம்
”டிஎச்எப்எல் நிறுவனத்தில் யெஸ் வங்கி 3700 கோடி ரூபாய் முதலீடு செய்து அதை திரும்ப எடுக்கவில்லை. அதற்கு கைமாறாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரின் இரு புதல்விகள் நடத்தும் போலி கம்பெனி மூலமாக ரூபாய் 600 கோடி லஞ்சம் பெற்றார்” என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டி ராணா கபூரை கைது செய்தது. அந்த லஞ்சம் எப்படி ஜோடிக்கப்பட்டது என்று பார்த்தால் ராணா கபூரின் போலி கம்பெனி ”750 கோடி ரூபாய் சொத்துக்கு” ஈடாக 600 கோடி ரூபாய் கடன் வாங்கியது போல் காட்டியிருப்பார்கள்.
ஆனால் அந்த சொத்தின் உண்மை சந்தை மதிப்பு 40 கோடி ரூபாய் கூட கிடையாது. இது ஓர் உதாரணம் தான்.
100 போலி கம்பெனிகள்
”ராணா கபூர் தலைமைப் பொறுப்பில் இருந்த போது வழங்கிய 30000 கோடி ரூபாய் கடனில் 20000 கோடி ரூபாய் வராக்கடனாகி விட்டது. இதில் பல கடன்களுக்கு அவர் 100க்கும் மேற்பட்ட போலி கம்பெனிகள் மூலமாக 4000 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடியில் ராணா கபூர், அவரின் மனைவி பிந்து கபூர், மூன்று மகள்கள் ராகி, ரோஷனி, ராதா உட்பட மொத்த குடும்பமும் ஈடுபட்டுள்ளது” என்று அமலாக்கத்துறையின் பூர்வாங்க குற்றப்பத்திரிக்கை கூறுகிறது. மிக சமீபத்தில் 2021 டிசம்பர் 31 ம் தேதி ராணா கபூர், அவர் மனைவி பிந்து கபூர் மீது 307 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக புதியதாக ஒரு குற்றப்பத்திரிக்கை அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு என்னாயிற்று?
இவ்வங்கியின் நிலைமை மிகவும் மோசமடைந்ததால் ரிசர்வ் வங்கியின் முன்னாள் உதவி கவர்னர் காந்தி அவர்கள் இவ்வங்கியின் இயக்குநராக 2019 மே மாதம் நியமிக்கப்படுகிறார். ஆனால் அதற்குப் பிறகும் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அப்படியானால் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு என்ன ஆனது? 2019 செப்டம்பரில் ராணா கபூர் தன்னுடைய அனைத்துப் பங்குகளையும் சந்தையில் அன்றைய விலைக்கு விற்று முழுமையாக வெளியேறுகிறார். இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணமான ஒருவர் எப்படி இவ்வாறு சுலபமாக வெளியேற அனுமதிக்கப்படுகிறார்?
யெஸ் வங்கி திவால் நிலைக்கு போகவே 2020 மார்ச் மாதம் இந்த வங்கியின் மீது வர்த்தகத் தடை விதிக்கப்பட்டது. இவ்வங்கியின் பங்குகளில் 49% வரை முதலீடு செய்து காப்பாற்ற அரசு வங்கியான ஸ்டேட் வங்கிதான் தேவைப்பட்டது. இல்லையேன்றால் யெஸ் வங்கி திவாலாகி வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை பெருமளவு பறி போயிருக்கும். யெஸ் வங்கி என்பது ஒரு சாம்பிள்தான். பல தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் உயர்மட்ட ஊழலில் திளைத்துள்ளன. அவற்றில் சில மட்டுமே வெளியில் தெரிகின்றன.
இவ்வளவுக்குப் பிறகும் அரசு வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முயல்கிறது. அனுமதிக்கப் போகிறோமா இந்த அநீதியை?
Let us take this to the public and make them to realise the danger in private sector banks ….
இதுபோல் பல ஊழல் வழக்குகளில் தனியார் வங்கிகள் சிக்கி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நஷ்டத்தை சந்தித்து இருக்கின்றன. அதனால் ஒன்றிய அரசு தனியார் மயமாக்கத்தை கைவிட்டு விட்டு எஞ்சிய பொதுவுடைமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும். இந்த அரசு செவிசாய்க்கவில்லை என்றால் மக்கள் சக்தி ஒன்று படவேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ONLY PUBLIC SECTOR BANKS CAN SAVE DEPOSITORS’ MONEY. Don’t encourage private sector banks. Do not privitize PSBs.
I support comrade bank nationalisation; we oppose and we condemn the central government policy of bank privatisation.
இந்த லட்சணத்தில் இன்னும் 2 பொதுத்துறை வங்கிய தனியாருக்கு கொடுக்க போறங்களாம்!
Every one knows.. But nobody acts.
ஒய்யார கொண்டை யிலே தாழம்பூ வாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும்.இது தான் தனியார் வங்கிகளின் நிலை.தனியார் மய கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும்.தோழரின் கட்டுரை அருமை…ரவீந்திரன்
நல்ல கட்டுரை. பிரச்சார குறிப்பாக பயன்படும்.
Government rescued the Delhi Based YES Bank through SBI Funds. Where as sold the KARUR based LVB to the Foreign Bank. This is the first time a Indian bank sold to Foreign Bank. God only knows the secret and deal behind it.
உரிய நேரத்தில் வெளியான அருமையான பதிவு, நன்றி, வாழ்த்துக்கள்.”Privatisation shall not pass” என்கிற கோஷமந்திரம் ஒலிக்கட்டும்! தனியார் மயமாதலை என்றும் அனுமதியோம்
Good. Well written
Thanks comrade so clear essay yes bank enlighten me now I started explaining to my better half
This man Rana Kapoor told in a press conference during this Yes Bank Fiasco that its shares are “Diamonds are Forever”. But he never said whose diam0nds it is? He was having all the ruling class connection and later everybody ditched him is a different story. So People should understand Public Sector is always safe.Don’t get excited by the reception while entering a bank branch.