சண்டிகர் கரே ஆஷிகி (இந்தி – நெட்ஃப்லிக்ஸ்)

திரை விமர்சனம்

சே.ப.ரவிசங்கர்

காலங்காலமாக நியாயம் மறுக்கப்பட்ட ஒரு பிரச்சனைக்கு முதல் முதலாக நியாயம் வழங்கியுள்ளது ‘சண்டிகர் கரே ஆஷிகி’.

திரண்ட தோள்கள், கட்டுடல், நவீன குடுமி, கறுப்பு தாடியுடன் இளமை மிளிரும் கண்களைக் கொண்ட ஆணழகன் மன்னு உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவன் அழகுக்கு சற்றும் குறைவில்லாத, மோனாலிஸா முகத்தோற்றத்துடன் நடன அசைவுகளைத் தெறிக்கவிடும் ஜும்பா நடன ஆசிரியை மாண்வி மாணவிகளுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறாள். இரண்டு பயிற்சிகளும் ஒரே கூடத்தின் இரண்டு பாதிகளில்.

ஒரு நாள் உடற்பயிற்சியின்போது மன்னு காயமடைய மாண்வி அவனுக்கு உதவுகிறாள். இ்ருவரிடையே காதல் மலர்கிறது. ஹோலி பண்டிகை கொண்டாட்ட நடனத்தின்போது உணர்ச்சி மேலோங்க மன்னு மாண்வியை தனிமைக்கு இழுத்துச் செல்கிறான். அவளுக்கும் சம்மதம்தான். ஆனாலும் ஏதோ சொல்ல முற்படுகிறாள். அவர்கள் இருவரும் தங்களை மறந்து ஒருமித்திருக்கிறார்கள். மன்னு மகிழ்ச்சியில் திளைக்கிறான். இது தொடர்கிறது. சில நாட்கள் கழித்து, மன்னு தன் திருமண விருப்பத்தை மாண்வியிடம்  சொல்கிறான். மாண்வி, தயக்கத்துடன், தான் ஆண் உடலில் இருக்கும் பெண் என்ற உண்மையைக் கூறுகிறாள். முதலில் அவள் சொல்வதை புரிந்து கொள்ளாத மன்னு, புரிந்து கொண்டவுடன் அதிரிச்சியடைகிறான். பின்னர் கோவப்படுகிறான், அருவருப்படைகிறான், அவளை கண் காணாமல் போகச் சொல்லி மிரட்டுகிறான். விலகிச் செல்கிறான். ஆனால் அத்தனை எளிதாக மன நிலையை மாற்றிக் கொள்ள இயலவில்லை.

நண்பர்கள் உதவியுடன் மருத்துவரை சந்திக்கிறான். மருத்துவர் நடந்த நிகழ்வுகளை முழுவதும் கேட்கிறார். இதில் பிரச்சனை ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அனைத்தும் மகிழ்வுடன் நடை பெற்றிருக்கிறது. அப்படியானால் காதலைத் தொடரலாமே என்ற ஆலோசனையை முன் வைக்கிறார். மன்னு ஆணவமில்லாத மனத்தினன். மருத்துவரின் ஆலோனையை பற்றிக் கொள்கிறான்.

வீதியில் சந்திக்க நேர்ந்த ஒரு மூன்றாம் பாலினப் பெண்ணிடம் தனக்கு இருக்கும் சில கேள்விகளைக் கேட்கிறான். விவரங்களை கேட்டுக் கொண்ட அந்தப் பெண் மாண்வி சரியான வயதில் சரியான அறுவை செய்து கொண்டுள்ளதால் மண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும் என்று தெளிவு படுத்துகிறாள். மாண்வியுடனான தன் நட்பைக் கொண்டாடிய குடும்பத்தினர் மாண்வியின் மூன்றாம் பாலின நிலை தெரிந்ததும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். ஆனால் மன்னு மாண்வியின் தோழியின் உதவியுடன் மாண்வியிடம் தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறான். காதலை ஏற்றுக் கொள்ளும்படி கேட்கிறான். மன்னுவின் காதல் மனதைத் தெரிந்த மாண்வி அவனின் காதலை ஏற்றுக் கொள்ளுகிறாள்.

மிக தைரியமாக மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சனையை கையில் எடுத்தமைக்கு இயக்குனர் அபிஷேக் கபூருக்கு முதல் பாராட்டு. கதைக்கு ஏற்ற களம், கதா நாயகன், நாயகி பாத்திரம், அதற்கு பொருத்தமான நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, வாணி கபூர் ஆகியோரை தேர்ந்தெடுத்தமை ஆகியவற்றுக்கு பாராட்டு. நம்பிக்கையோடு கதைக்கு அவசியமான காட்சிகளை வைத்துள்ளமைக்கு பாராட்டு. வழக்கமான பாதையிலேயே பயணிக்காமல் புதிய பாதையை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

7 comments

  1. Excellent story review.ஒரு புதுமையான படைப்பு. அருமை.

  2. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம். அருமை.

  3. Before reading the review of the movie I saw the movie but switched it off after a few minutes. The different review of a different movie compels me to watch it fully. Will do so quite soon

  4. I was not knowing about this magazine, first and foremost review, this hindi film only I read now. I will be regular. so much thanks.

  5. Excellent review and the movie is the talk of the town in the OTT platform. We sincerely need to analyse this issue. Most of them are outrightly discarded from the society. Few fight it out and come out successful in education or small business. Many opt for taking money forcefully from people in public transport just due to non employment. I wish to recollect my classmate who is doing a wonderful job in thier rehabilitation in Mumbai.

    Just want to say that keep a plain mindset and watch a movie instead of one particular sidelining. There is one more movie which needs your attention. “Yennanga Sir unga Sattam”.

Comment here...