தமிழ்நாடு கிராம வங்கியின் வளத்தி கிளை மாற்றப்பட்டு விட்டது

பாரதி

பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிடியின் ஜனவரி 15 மின்னிதழில் தமிழ்நாடு கிராம வங்கியின் வளத்தி கிளையில் பாம்புத் தொல்லை பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததை படித்திருப்பீர்கள்.

ஒரு கை ஓசை எழுப்பாது. பல கைகள் தட்டினால் தான் ஓசை எழும்பும் என்பது பழமொழி. ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்காத ஒலி, இன்று பலரின் கேள்விகளாலும், சங்கங்களின் முயற்சியாலும் கேட்க வேண்டிய நபர்களுக்கு கேட்டிருக்கிறது. ஆம், ஒரு வருடத்திற்கும் மேலாக புதுக்கிளைக்கு மாற்ற ஒப்புதல் தராமல் இருந்த தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் காதுகளை சென்று அடைந்திருக்கிறது. வளத்தி கிளை 2022 ஜனவரி 19ம் தேதி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. பல நாட்களாக பாம்புகளின் தொல்லையால் அவதி பட்டு கொண்டிருந்த தமிழ்நாடு கிராம வங்கி வளத்தி கிளை ஊழியர்கள் தற்போது சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டு இருக்கிறார்கள்.

2 comments

  1. இவ்விஷயத்தில் பலரின் கோரிக்கைகளும் சங்கங்களின் ஆலோசனைகளும் நல்ல ஒரு முடிவை ஏற்படுத்தி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வங்கி நிர்வாகத்தின் செயலும் பாராட்டுக்குரியது.

  2. வங்கி வணிகம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் பாதுகாப்பும் முக்கியம்.

Comment here...