உரிமை இல்லையா?

ஜேப்பி

இன்று காலை
வழக்கம் போல்
அதே நேரம்
அதே சீறுடை
அதே முட்டாக்கு

வீட்டை விட்டு
பள்ளிக்குக்
கிளம்பினேன்
“படிக்க”

எனக்குத் தெரியாது
இன்று அவர்கள்
புடைசூழ படை எடுத்து
வருவார்கள் என்று

பள்ளியின் வாசலில்
“புதிய இந்தியா”வின்
“ராம ராஜ்ஜியத்தின்”
தூதுவர்கள்

நான் அவர்களை
தலைப்பாகை
தொப்பி முட்டாக்கு
எதையுமே
அணியச்
சொல்லவில்லை

நான் அவர்களை
உருது பேசு
எனவோ
“சலாம்” சொல்
எனவோ
எடுத்துரைக்கவில்லை

அவர்களின்
இயல்பில்
நடப்பில்
நாட்டத்தில்
நான் என்றுமே
தலையிட்டதில்லை

இருப்பினும்
நுழையும் முன்பே
பலர் என்னை
சுற்றி வளைத்து
கற்றுக்
கொடுக்கிறார்கள்

“காவிகளின்
“காந்தி” தேசத்தில்
காவிகள் வைப்பது
தான் சட்டம்
மனித உரிமை
மறுக்கப்படும்”

நான் என்ன
செய்வது?
“கடவுளே
சிறந்தவன்”
எனக் கூறினேன்

இதற்கும் கூட
உரிமை
இல்லையா?

2 comments

  1. அனைத்து மதமும் நல்லதை தான் சொல்கிறது.என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்று பேசுவதே தவறு.கடவுள் என்ற சக்தியை பல்வேறு விதமாக பிராத்திக்கிறோம்.அடுத்த மதத்தை மதிக்க கற்று கொள்ள வேண்டும்.புண்படுத்த கூடாது.

  2. இந்த போராட்டத்தில் போலி தனம் இல்லை தேசப்பற்று ஒன்றே குறிக்கோள் என நீங்கள் நம்பினால் சரி!😃

Comment here...