டி.ரவிக்குமார்
வளரும் நாடுகளில் மனிதாபிமான தேவைகளுக்காக ஆக்ஸ்பாம் என்ற பெயரில் செயலாற்றி வந்த பல குழுக்கள் 1951 முதல் இந்தியாவில் செயலாற்ற துவங்கின. 2008 ல் இந்தியாவில் உள்ள அனைத்து ஆக்ஸ்பாம் குழுக்களும் இணைக்கப்பட்டு ஆக்ஸ்பாம் இந்தியா (OXFAM INDIA) என்னும் பெயருடன் இயங்கி வருகின்றது.
பல ஏற்றத்தாழ்வுகளுடன் வாழும் மக்களின் மத்தியில் அவர்களுடைய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, அனைவரும் பாகுபாடின்றி வாழ பணி செய்யும் நோக்கில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மக்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களுடைய பொருளாதார முன்னேற்றம், அடிதட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பு, சாதாரண மக்கள் சமுதாயத்தில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள், மக்களிடையே நிலவுகின்ற பாகுபாடுகளை சரி செய்வதில் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவைகளைத் தொகுத்து ஆண்டறிக்கையாக வெளியிடுகின்றது.
2022, ஜனவரி 16 ல் வெளியிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் துணை அறிக்கை, இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களிடையுமான இடைவெளி எவ்வாறெல்லாம் விரிந்து கொண்டே போகின்றது என்பதை தெளிவாக விளக்குகின்றது.
இந்தியாவில் ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கும் போது, அவர்கள் தான் அதிக அளவில் வரி செலுத்துபவர்களாகவும் உள்ளனர். அதே சமயம் குறைந்த அளவில் வரி செலுத்தும் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கின்றார்கள்.
- 84 சதவீத இந்திய மக்களின் வருமானம் 2021ல் பெருமளவு குறைந்துள்ளது. அதே சமயம், பெரும் பணக்காரர்களின் சொத்து ரூ 21.14 லட்சம் கோடியிலிருந்து ரூ 53.16 லட்சம் கோடியாக 130 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
- 4.6 கோடி மக்கள் புதிதாக 2020ஆம் ஆண்டு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளின் தகவல்படி, உலகத்தில் புதிதாக உருவாக்கப்படுள்ள ஏழைகளில் சரி பாதிக்கும் மேல் இந்தியாவில் உள்ளனர்.
- பாலின பாகுபாடு 99 வருடங்கள் பின் தங்கியிருந்த நிலையில் தற்போது 135 வருடங்கள் பின் தங்கியுள்ளதாக அறிக்கை கூறுகின்றது. 1. 3 கோடி பெண்கள் 2019 ஆம் ஆண்டைவிட குறைவாக பணியில் உள்ளனர். அவர்களுடைய மொத்த வருமானம் 2020 ஆம் வருடத்தைவிட ரூ 59.11 லட்சம் கோடி குறைந்திருக்கின்றது.
- இதற்கு மாறாக உலக பில்லினர்களின் எண்ணிக்கையில் இந்தியா, சைனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பில்லினர்களின் எண்ணிக்கை 102 லிருந்து 142 ஆக 2021ஆம் ஆண்டு உயர்ந்துள்ளது.
- 98 இந்திய பணக்காரர்களின் சொத்தும் (65700 கோடி அமெரிக்க டாலர்கள்) 55 கோடி இந்திய ஏழைகளின் சொத்தும் சமமாக உள்ளது.
- 2016 ல் முற்றிலுமாக நீக்கப்பட்ட சொத்து வரி, கார்பரேட் வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள செங்குத்தான வரி குறைப்பு மற்றும் மறைமுக வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பு ஆகியவை பெரும் பணகாரர்கள் வரி வசூலின் பிரதான ஆதாரம் என்ற நிலையை முற்றிலுமாக நீக்கி உள்ளது.
- இரண்டு வருடத்திற்கும் மேலாக பெருந் தொற்றினால் மக்கள் அவதிக்குள்ளாகிக் கொண்டிருக்க சுகாதரத்திற்கான நிதி ஒதுக்கீடு பத்து சதவீதம் குறைக்கப்பட்டுள்ளாது. கல்விக்கான ஒதுக்கீடு 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
- அரசாங்கம் குடிமக்களுக்கு, சிறப்பான கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, உணவு, குடிநீர், போக்குவரத்து ஆகியவற்றை உறுதி செய்வதால், மக்களின் வாழ்க்கைத்தரம் உத்தரவாதப்படுத்தப்படும். அரசாங்கம் மட்டுமே இந்த நோக்கை உறுதி செய்ய முடியும். மாறாக, தனியார்களிடம் இதை எதிர்பார்ப்பது, சம பயன்பாட்டையும், ஒன்றிணைப்பையும் சிதைக்கும்.
ஆகிய பிரதான ஏற்றத்தாழ்வு குறீயீடுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மோசமான பாகுபாட்டிலிருந்து மீள ஆக்ஸ்பாம் முன் வைக்கும் யோசனைகள்
- நிலவும் சமத்துவமின்மையை உண்மை என்று ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்
- சமுதாயத்தின் மேல்தட்டு மக்களிடமிருந்து வருமானத்தை அதிகரித்து அதை சீராக அனவருக்கும் பகிர்ந்து செலவழிப்பது
- பெரும் பணக்காரர்களில் 10 சதவீதத்தினருக்கு விதிக்கபடும் கூடுதல் ஒரு சதவீத வரியே ரூ. 8.67 லட்சம் கோடி கூடுதல் நிதியாதாரத்தை அரசுக்கு அளிக்கும். அதைக் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
- மொத்த தொழிலாளிகளில் 93 சதவீதம் உள்ள முறைசாரா தொழிலாளர்களின் பணி முறைபடுத்தப்பட வேண்டும்.
- தனியார்மயப்படுத்துதலும், பொதுச் சொத்துகள் வணிகமயமாக்கலும் திரும்ப பெறப்படவேண்டும். வேலையில்லா வளர்ச்சி பற்றி சிந்திக்க வேண்டும்..
இந்த ஆலோசனைகளை திறந்த மனதோடு ஏற்று செயல்படுத்துமா இந்த அரசு?
Good
The author had taken pains in bringing out the truth on economic status of our people. Will the GOI hear? Greetings to the author.
A well narrated article. Easy to read and grasp. Clearly explains the factual position of the economy and the solution to overcome it.
The ever widening gap of inequality is well explained. There is an urgent need for taxing the rich and the article enlightens the readers as to how a 1% tax on the top 10 could garner a phenomenal amount for the exchequer. Good.
ஆக்ஸ்பாம் குழுவின் அறிக்கை 2021-ல் அசமத்துவங்கள் மேலும் அதிகமாகி உள்ளதை புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளது. கட்டுரை அறிக்கையின் விபரங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.
அறிக்கையின் முடிவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இவை பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக (narrative) இன்னும் மாறாத, மாற்றப்படாத அவலத்தைத்தான் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன..
இந்திய மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது, கட்டுரை.
அரசின் மேல் மக்களின் நிர்பந்தமே கொள்கை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.