மீளெழுந்து வருவோம்

மெகிரா

புல்டோசர்களால்

வீடுகளைத்தான் இடித்திட முடியும்.

அவர்களின்

நம்பிக்கையை

அல்ல !!!

புல்டோசர்களால்

உடமைகளைத்தான் அழித்திட முடியும்.

அவர்களின் துணிச்சலை

அல்ல !!!

கேள்விகள் கேட்கும்

குரல்தனை நசுக்க

கேடு கெட்ட அரசிற்கோ

காலத்திற்குக் காலம்

ஒவ்வோர்

ஆயுதம்.

வெறுமனே

ஆயுதங்களை

நாம் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில்

பயனில்லை.

பாவம்

அவற்றுக்கு

அழிக்க மட்டுமே

தெரியும்.

அத்தனைக்குப்பின்பும்

அதேக் கம்பீரத்துடன்

மீளெழுந்து வர

ஆப்ரீன்க்கு தெரியும்.

எங்களுக்கும்

தெரியும்.

One comment

  1. நம்பிக்கை நார்களால் கட்டப்பட்ட கவிதைப் பூக்கள். வாழ்த்துகள் மெகிரா

Comment here...