ஜூலை 21 பாராளுமன்றம் முன்பு தர்ணா
நமது செய்தி தொகுப்பாளர்
வரும் 19 ஜூலை 53வது வங்கிகள் தேசிய மய நிறைவு தினத்தை ஒட்டி, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கெதிராக தீவிர பிரச்சார, போராட்ட நடவடிக்கைகளுக்கு UFBU அறைகூவல் விடுத்துள்ளது. ட்விட்டர் பிரச்சாரம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தி தேச வளர்ச்சியில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராக ஜூலை 21 பாராளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடத்துவதென்றும், அரசு வங்கிகள் தனியார்மயமாக்க பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு குறுகிய கால அவகாசத்தில் அகில இந்திய வேலைநிறுத்தம் நடத்தவும் UFBU முடிவு செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை காப்போம்! நாட்டை காப்போம்!

