சி.பி.கிருஷ்ணன்
ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவி சீமா பத்ரா அவர் வீட்டில் பணி செய்யும் பழங்குடி பெண்ணை நாவால் நக்கி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த நிகழ்வு நாட்டையே உலுக்கி உள்ளது, கடந்த எட்டு ஆண்டுகளாக இத்தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 29 வயதான பழங்குடிப் பெண் சுனிதா காவல் துறையிடம் அளித்த புகாரில் “ஏதாவது சிறியதாக தவறு செய்தால் கூட எஜமானி (சீமா பத்ரா) கடுமையாக அடித்து விடுவார். இரும்பு ஆயுதத்தால் முகத்திலே ஓங்கி அடிப்பார்; என்னுடைய பற்களெல்லாம் உடைந்து விட்டன. பல நாட்கள் உணவே கொடுக்க மாட்டார்; அவருடைய மூத்திரத்தை நாக்கால் நக்கி கழுவச் சொல்லி அடிப்பார்……..”என்று கூறியுள்ளார்.
”நான் உயிர் பிழைப்பேனா என்றே தெரியாத நிலை தான் இருந்தது; என்னை தினமும் சித்ரவதை செய்வார்; இப்படி எட்டு ஆண்டுகள் கொடுமையை அனுபவித்தேன்” என்று மேலும் கூறியுள்ளார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர் ”அவருக்கு உடலில் பல இடங்களில் கடும் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளன” என்கிறார்.
ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சீமா பத்ரா ஜார்க்கண்ட் மாநிலத்தில் செல்வாக்குள்ள பாஜக தலைவி. அவருக்கு மேலிடம் வரை நெருக்கமான தொடர்புள்ளது என்று கூறப்படுகிறது. “பேட்டி பசாவோ, பேட்டி படாவோ” அதாவது “மகளை காப்பாற்றுங்கள், மகளை படிக்க வையுங்கள்” என்ற மத்திய அரசின் திட்டத்தை அமுலாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராம் இவர். இவரின் கணவர் ஒர் ஐஏஎஸ் அதிகாரி. அதனாலும் கூடுதல் அதிகாரம் சீமா பத்ராவுக்கு உண்டு.கண்டிக்காத பாஜகவிஷயம் வெளியே தெரிந்தவுடன் சீமா பத்ராவை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து தனது கடமையை முடித்துக் கொண்டது பாஜக.
இந்த நிகழ்வை கண்டித்து ஓர் அறிக்கை கூட விடவில்லை. குற்றமிழைத்த சீமா பத்ராவை கைது செய்யக் கூட கோர வில்லை. நாடெங்கும் எழுந்த கொந்தளிப்பால் சீமா பத்ரா தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மகன் தான் வெளி உலகுக்கு கொண்டு வந்தார் எல்லா முதலாளித்துவக் கட்சி அரசியல்வாதிகளைப் போல் சீமா பத்ராவும் “இது என் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டு; இதில் துளியும் உண்மை இல்லை” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மை என்னவெனில் சீமா பத்ரா செய்த கொடுமையை வெளி உலகுக்கு கொண்டு வந்து அந்த பழங்குடிப் பெண்ணை காப்பாற்றியதே சீமாவின் மகன் ஆயுஷ்மான் பத்ராதான். வீட்டு பணிப் பெண்படும் கொடுமையை தாங்க முடியாது, அதனை வீடியோ எடுத்து தனது நண்பர் அரசு அதிகாரி விவேக் பாஸ்கி மூலம் காவல் துறையில் புகார் கொடுக்க வைத்ததே ஆயுஷ்மான் பத்ராதான். இதனை பொறுக்க முடியாத சீமா பத்ரா, தான் தப்பித்துக் கொள்ள தனது மகனுக்கு மன நலம் சரியில்லை என்று கூறி மன நல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதித்துள்ளார். எனவே சீமாவின் மறுப்பில் துளியும் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.
இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு, விரைவாக வழக்கு நடத்தப்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் மிகுந்த செல்வாக்கு படைத்தவர். சட்டத்தை வளைத்து தப்பிக்கும் திறன் கொண்டவர். எனவே வழக்கு முடிந்து தண்டனை வழங்கப்படும் வரை சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயக சக்திகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இத்தகைய எண்ணிலாக் குற்றங்கள் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. சில மட்டுமே பொது வெளியில் தெரிகின்றன. வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்களுக்கு, வீட்டில் உதவி புரியும் பெண் நர்சுகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. எனவே இவர்களுக்கான உரிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும். அதற்காக சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
75 ஆவது சுதந்திர தின விழாவில் கூட நாட்டின் பிரதமர் பெண்களை பாதுகாப்பதற்கான அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்துவதற்கான பல திட்டங்களை தங்களது அரசு செய்து வருவதாக பேசினார். ஆனால் இம்மாதிரியான கொடூர செயல் பெண்களுக்கு எதிராக நடக்கும் பொழுது அவர் தனது மௌனம் கலைத்து இத்தகைய செயலை கண்டிக்க வேண்டும். பெண்களின் வாழ்நிலை முன்னேற்றம் அடைய வகை செய்யும். இந்தியர்களின் எதிர்பார்ப்பும் இதுதான்…
அதே சித்தரவதையை சீமாவும் அனுபவிக்க வேண்டும்
This kind of heinous activity is completely inhuman and deserves punishment irrespective of any party or association. The NHRC should take it up unbiased and arrest the accused.
On the other hand this has no relation to bank workers other than condemnation and necessary support to that domestic help which should be rendered.
Why the hate speeches of Mr. George Ponniah, Mr. Rajiv Gandhi or Mr. A Raja not condemned by the Bankers or in this platform but an immediate response was seen on Mr. Gurumurthy is it sincerely because of the unconditional association with the ruling party? What is then meant by actual secularism that few preach?
திருடன் திருடி தலையாரி வீட்டில் நுழைவது போல கயவர்கள் ஆட்சியாளர்கள் கட்சியில் தானே.இங்கிருந்து நியாயம் கிடைக்குமா. குற்றவாளிகள் கையில் நாடே இருக்கு…