ஓ ஜெர்மனி, நலமற்ற என் தாயே!

கவிதை: பெர்டால் பிரக்ட்

(பெர்டால் பிரக்ட் ஒரு ஜெர்மானிய மார்க்சிய நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர். நாஜி ஜெர்மனி பற்றி அவர் எழுதிய அற்புதமான கவிதை இது. நாஜிகள்  காலத்தில் பிரெக்ட் தனது சொந்த நாடான ஜெர்மனியிலிருந்து  ஸ்காண்டிநேவியாவிற்குச் சென்றார். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கும் அவர் FBI ஆல் கண்காணிக்கப்பட்டார். போருக்குப் பின் கிழக்கு பெர்லினுக்குத் திரும்பிய அவர், தனது இணையர் நடிகை ஹெலன் வெய்கலுடன் பெர்லினர் குழுமத்தை நிறுவி பல நாடகங்களைத் தயாரித்து நடத்தினார்.)

ஆங்கிலத்தில் இருந்து தமிழில்: ஜேப்பி

அடுத்தவர்கள்

அவளது அவலத்தை

அலசட்டும்

நான் எனது

அவமானத்தைப்

பேசுகிறேன்.

ஜெர்மனியே, நலமற்ற என் தாயே!

உனக்குள்ளே ஏமாந்த

மக்களைச் சுமந்து கொண்டு

உனை நீயே

இவ்வளவு இழிவாக்கிக்

கொள்கிறாய்.

உனது ஏழை மகன்கள்

பசித்திருந்தும்

அடித்து வீழ்த்தப்பட்டுக்

கிடக்கின்றனர்.

மற்ற உன் புதல்வர்களால்

அவர்கள் அடக்கப்படுவது

கொடுமையல்லவா.

அவர்தம் உடன்பிறப்பையே

அடக்கும் அப்புதல்வர்கள்

அசிங்கமாக உனைச் சுற்றி

சிரித்து உல்லாச

வலம் வருகின்றனர்

இதை நன்கு அறிவோம்.

உன் வீட்டில் பொய்கள் எல்லாம்

உரத்த குரலில்

உற்சாக ஆர்ப்பரிப்பு

செய்கின்றன.

ஆனால்,

உண்மை மட்டும்

ஊமையாக அமைதியாக

இருக்க வேண்டும்.

அப்படித்தானே?

அடக்குமுறையாளன்

உனைப் புகழ்ந்து ஏன்

எங்கும் பாடுகிறான்?

ஒடுக்கப்பட்டவனோ

உனைக் கை காட்டுகிறான்

ஆனால் கொள்ளையடிப்பவன்

உன் அகத்தில் உருவாக்கப்பட்ட

இந்த அமைப்பு முறையைப்

போற்றிக் கொண்டாடுகிறான்

உன்னதமான

உன் புதல்வர்களின்

உதிரம் தோய்ந்த

உன் மேலாடை

முந்தானையை நீ

மறைத்து வைப்பதை

மன்றமே பார்க்கிறது

வீராவேசப் பேச்சுக்கள்

வீடு எங்கிலும்

எதிரொலித்துக்

கொண்டிருப்பதைக்

கேட்பவர் யாவரும்

எள்ளி நகைக்கின்றனர்

உனைப் பார்ப்பவன்

கொள்ளையனைக்

கண்டு மிரண்டது போல்

குறுவாளில் கைவைக்கிறான்

ஜெர்மனியே, நலமற்ற என் தாயே!

எப்படித்தான்

இப்படிக் கேவலமாக

பயங்கரமாக

உன் மக்களிடையிலேயே

உனைக் கொலுவிருக்க

உன் புதல்வர்கள்

வைத்திருக்கிறார்களோ!!!

O Germany, Pale Mother!

by Bertolt Brecht

Let others speak of her shame,

I speak of my own.

O Germany, pale mother!

How soiled you are

As you sit among the peoples.

You flaunt yourself

Among the besmirched.

The poorest of your sons

Lies struck down.

When his hunger was great.

Your other sons

Raised their hands against him.

This is notorious.

With their hands thus raised,

Raised against their brother,

They march insolently around you

And laugh in your face.

This is well known.

In your house

Lies are roared aloud.

But the truth

Must be silent.

Is it so?

Why do the oppressors praise you everywhere,

The oppressed accuse you?

The plundered

Point to you with their fingers, but

The plunderer praises the system

That was invented in your house!

Whereupon everyone sees you

Hiding the hem of your mantle which is bloody

With the blood

Of your best sons.

Hearing the harangues which echo from your house,

men laugh.

But whoever sees you reaches for a knife

As at the approach of a robber.

O Germany, pale mother!

How have your sons arrayed you

That you sit among the peoples

A thing of scorn and fear!

Comment here...