மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு

இ.சர்வேசன்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சென்ற ஊதிய ஒப்பந்தம் 31.12.2020 ல் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் 1.1.2021 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை 2022 ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை 2022 நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. 

இப்பேச்சுவார்த்தை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) தலைமையில் நடைபெற்றது. ஐந்து சங்கங்களுடன் தனித்தனியே பேச்சு வார்த்தை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பாக (BEFI) கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

1) இதுவரை நடந்திட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகள்    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையிலேயே நடந்தது . அதுபோலவே தற்போதும் பதிவாளர் தலைமையிலேயே கூட்டம்  நடைபெற வேண்டும். 

2) தொழிற்சங்கங்களை தனித்தனியாக அழைத்துப் பேசாமல் ஒன்றாக அழைத்துப் பேசி ,ஒவ்வொரு கோரிக்கையாக இறுதி செய்திட வேண்டும்.

3) ஊதிய உயர்வு சதவீதம் அனைத்து மத்திய வங்கிஊழியர்களுக்கும்  ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். வங்கிகளைA,B,C,D என தரம் பிரிப்பது கூடாது.

4) கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விச்சலுகை உள்ளிட்ட ஷரத்துக்களை நிறைவேற்றாத விருதுநகர்,மதுரை,தூத்துக்குடி உள்ளிட்ட மத்திய  வங்கி நிர்வாகங்கள்   அவற்றை நிறைவேற்றவேண்டும்.

5) ஊழியர்களின் அனைத்து கடன்களுக்கும் (கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கடன்கள் உட்பட அனைத்திற்கும்) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 அன்று வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டிவீதமே  நிர்ணயித்து வசூலிப்பது சில வங்கிகளில் அமலாக்கப்படாமல்  உள்ளது.இதை அமல்படுத்த வேண்டும். 

6) மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட மாறுதல் உடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

7)நகர கூட்டுறவு வங்கி ஊழியர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு குழு உறுப்பினர்கள் விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.உடன் வெளியிடவேண்டும்.

8) அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பரிசீலித்த ஊழியர்களுக்குTA, DA வழங்கப்படாமல் உள்ள வங்கிகளில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) திருநெல்வேலி, சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியர்களுக்கு 5%ஊதிய உயர்வு  12(3) ஒப்பந்தப்படி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். 

10) தேர்வு நிலை ஊதிய பெருக்கம் வழங்க 12 ஆண்டு முடிந்த ஊழியர்கள் கடிதம் அளிக்க வேண்டும் எனக்கோருவது வங்கி நிர்வாகம் தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உள்ளது.  (உ. ம் திருச்சி)இவ்வாறு கடிதம் கோருதல் கூடாது. 

11) காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை நீண்ட காலமாக ஒப்பந்தங்களின்படி வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும் .

12) மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு விடுப்பு முடிந்து வந்த பிறகு தான் விடுப்பிற்கான சம்பளம் தர முடியும் என நிர்வாகம் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. 

 (உ.ம் தூத்துக்குடி)

13) மத்திய வங்கி ஊழியர்களின் பென்ஷன் உயர்வு சம்பந்தமான கோப்பு அரசுக்கு விரைந்து அனுப்பிட கோறியதற்கு பரிசீலனை செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது

பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது. கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளிக்க்ப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை விரைவில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

One comment

Comment here...