சி.பி.கிருஷ்ணன்
நாட்டு மக்களின் வாழ்வை பாதிக்கும் ஒன்றிய அரசின் 2023-24 பட்ஜெட் பற்றி பெரு முதலாளிகளிடமும், முதலாளிகள் சங்கங்களிடமும் மணிக்கணக்காக ஆலோசனை நடத்துகிறார் ஒன்றிய நிதி அமைச்சர். அதே சமயம் கோடிக்கணக்கான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களுக்கு மொத்தம் 75 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளார். அதுவும் இணைய வழியாகவாம். நவம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள இக்கூட்டம் பற்றி மத்திய தொழிற்சங்கங்களுக்கு கடிதம் வந்துள்ளது. 12 தொழிற்சங்கங்களுக்கு மொத்தமாக 75 நிமிடங்கள் நேரம் போதாது என்பதை கூட்டாக தங்கள் 2022 நவம்பர் 25ஆம் தேதிய கடிதம் மூலம் தெரிவித்தன மத்திய தொழிற்சங்கங்கள்.

ஆனால் அதே தேதியில் நிதி அமைச்சரிடமிருந்து வந்த கடிதத்தில் ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும் 3 நிமிடங்கள் ஒதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. ”இது தொழிற்சங்கங்களை குரூரமாக பரிகசிக்கும் செயல். இத்தகைய மோசமான நடவடிக்கையை மத்திய தொழிற்சங்கங்கள் ஒரு போதும் ஏற்காது. இந்த கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க மாட்டோம்” என்று தெரிவித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. ”உடனடியாக தேவையான கால அவகாசத்துடன் நேரிடையான கூட்டம் கூட்டப்பட்டு எங்கள் ஆலோசனையை பெற வேண்டும்” என்று கோரியுள்ளனர். ”இல்லையென்றால் உங்கள் அரசு கடைபிடிக்கும் பொருளாதார கொள்கையை பற்றி நீங்களும் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்க நாங்கள் தயார். நீங்கள் தயாரா? என்று வினவியுள்ளனர் மத்திய தொழிற்சங்க தலைவர்கள்.
உண்மை !.
நிதியமைச்சர் நிலைப்பாடு மேல் கோபமே எழுகிறது.