இணைய இதழ் துவங்கி ஓராண்டு நிறைவு

தலையங்கம்

சென்ற ஆண்டு டிசம்பர் 11 பாரதி பிறந்த தினத்தன்று BWU இணைய  இதழாக உருவெடுத்தது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தவறாமல் 53 இதழ்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் பதிவிடுகிறோம். 

இதுவரை  309 கட்டுரைகள் வெளியிடப்படடுள்ளன. அதில் தமிழ் கட்டுரைகள் 218; ஆங்கிலக் கட்டுரைகள் 91.

வங்கிகள் ஊழியா்கள் நலன், வங்கிகள் நலன், தொழிற்சங்கம், தேச நலன், பொருளாதாரம், உலக தொழிலாளா் போராட்டங்கள், கலை, அரசியல், சுற்றுபுற சூழல் என பரந்த தலைப்புகளில் 80ற்கும் மேற்பட்டவர்கள் வரைந்த கட்டுரைகள்;அளப்பறிய பங்களிப்பு! உற்சாகமளித்த வாசகா்கள், தங்கள் கருத்துக்களை பகிர்ந்ததன் மூலம் உவகையூட்டிய பங்கேற்பாளர்கள் . 1,24,000 வாசிப்புகள்; 86,327 பேர் பின்தொடர்வு. உலகம் முழுவதும் 40 நாடுகளில் இருந்து BWU கட்டுரைகளை படித்து கருத்துக்கள் பதிவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. USA,Canada,U.K,UAE,Czeck Republic, Singapore, Malaysia என உலகில் உள்ள 20 சத நாடுகளில் இருந்து படிக்கிறார்கள் என்பது புதிய உற்சாகத்தை அளிக்கிறது.

பயணம் துவங்கியிருக்கிறது;

ஏராளமான பணி காத்திருக்கிறது;

இன்னும் நிறைவாய் செய்ய கரம் கோர்ப்போம்!

நடையல்ல! பெருநடை போட்டு ஊழியா் ஒற்றுமைக்கு,

வங்கி ஊழியா் ஒற்றுமைக்கு ஓங்கி ஒலிக்கும் குரலாய் வலம் வரும்   BWU உங்களின் தொடா்ச்சியான ஆதரவால் அடுத்தடுத்து பல புதிய விஷயங்களை புதிய ப ரிமாணத்துடன் வழங்கி  வலம் வர  உங்கள் ஆதரவு தொடரட்டும்.

One comment

  1. 40 நாடுகளில் சுமார் 90000 பேர் படிக்கின்றனர்.. எவ்வளவு பெரிய விஷயம்! பாராட்டுக்கள் தோழர்..

Comment here...