போராட்ட பூமியில் புதுமை பெண்களின் அணிவகுப்பு

ஏ.ராதிகா

ஜனவரி 6 தேதி காலை விண்ணதிர கோசங்களுடன் அகில இந்திய தலைவர்  அவர்கள்  கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்கள். அதன் பின்னர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

13ஆவது தேசிய மாநாட்டை பிரபல நடன கலைஞரும், மனித உரிமை ஆர்வலரும், கலா மண்டல பல்கலைக்கழக வேந்தருமான மல்லிகா சாராபாய் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மனுநீதி மனப்பான்மையை  எதிர்த்து போராட மகளிர் அமைப்புகள் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார. லட்சக்கணக்கான இந்திய பெண்களின் மனதில் மனுஸ்மிருதி இன்றும் வாழ்கிறது; பெண்களின் மனநிலையை மாற்றுவது பெரிய சவாலாக உள்ளது; இதற்காகவே போராட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்றார். 20 ஆண்டுகளாக குஜராத்தில் மூச்சு திணறலோடு தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.

டீ ஸ் டா சேதல்வாத்  தனது வாழ்த்துரையில்

வெறுப்பு பேச்சு மற்றும் எழுத்துக்களுக்கு  எதிராக புகார் தெரிவித்து குரல் எழுப்புவதோடு, சட்டத்தை அணுக வேண்டும் என்றார். உபா  மற்றும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். என்ஆர்சி மற்றும் என்பிஆருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த கேரளா உள்ளிட்ட அரசை பாராட்டினார். மனித உரிமைகள் அல்லது பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது போன்ற போராட்டங்களில் எப்போதும் உடன் இருப்பதாக உறுதி அளித்து பேசினார்

மோடி பேமன் பாடல் மாநாட்டில் பாடியது மாநாட்டு அரங்கையே அதிர  வைத்தது. அரியானா மாநிலம் சேனாதிபதி மாவட்டத்தை சேர்ந்த சீலா போட்டானா மற்றும் அவரது குழுவினர் பாடலும் மெட்டுக்களும்  வந்தவர்களை வரவேற்றன. அரியானாவில் விவசாயிகள் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர் தான்  சீலா

போட்டானா.  சீலா மரபு வழி நடைமுறை சவால்களைக் கடந்து பொதுவெளிக்கு வந்தவர். முகமூடியுடன் கூடிய ஆடையை(குங்கப்) தவிர்த்தவர். பெண்களை ஒருங்கிணைத்து மின்சாரம் தண்ணீருக்காக வீதியில் இறங்கியவர். வன்முறை கும்பல் தாக்குதலாலும் பொய் வழக்குகளாலும் பாதிக்கப்பட்டவர். சேனாதிபதி மகளிர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் கிசான் சபா மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது

 போராளிகள் கௌரவித்தல்

 அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடையாளமாக விளங்கும் ஹரியானாவின் ஷீலா ஹோணி, கமலேஷ், தமிழ்நாட்டின் ரேவதி, கேரளத்தின் மனிசியா, ஒடிசாவின் சம்யுக்தா மேற்கு வங்கத்தின் புள்ளரா மண்டல் ஆகியோர் கௌரிவிக்கப்பட்டனர்

அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழக காவல்துறையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சுப்பிரமணியன் மனைவி ரேவதி.

இவர் கடந்த 7 ஆண்டுகாலம் தன் இணையரின் மரணத்திற்கு நீதிகேட்டு  ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து  போராடிக்கொணடிருக்கிறார்.

வழக்கு CBCID விசாரணையில் உள்ளது. 33 லட்சம் ரூபாய் ரேவதி குடும்பத்திற்கு நிவாணம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. ரேவதி இன்று கடலூர் மாவட்ட பொருளாளர். நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர்.

 மாதர் சங்க மாநாட்டில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன

1. பி கே ஸ்ரீமதி எழுதிய கேரளாவை வழிநடத்திய பெண்கள்

2. எம் ஜோசபின் எழுதிய இரண்டாம் பதிப்பான பெண்கள் பாலியல் அறிவொளி

3. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உருவாக்கம் மற்றும் தேசிய மாநாட்டு நடவடிக்கைகள்

4. கும்னாம் வீராங்கனைகளே ( தெரியாத பெண் போராளிகள்)

5. வரதட்சணை பாலியல் வல்லுறவு தடை சட்ட உருவாக்கத்தின் ஆரம்ப கால போராட்டங்கள்

 ஆகிய 5 நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.

 மாநாட்டின் மிக முக்கிய அம்சமான ஆறு ஆய்வு அறிக்கைகள் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டன

1. காலநிலை மாற்றமும் பெண்களும்

2. தேசிய கல்விக் கொள்கை 2020

3. பாலியல் தேர்வு தடை சட்டம்

4. இந்தியாவில் பெண்கள் இயக்கம் மற்றும் சுதந்திர போராட்டம்

5. பெண்களின் உரிமைகள் மற்றும் ஒற்றுமையின் தேவை

6. வேலையின்மை மற்றும் பெண்கள்

 மாநாட்டில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களை பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை முடிவு கொண்டு வர வேண்டும், அறிவியல் உணர்வை வளர்த்துக் கொள்வது மூடநம்பிக்கை எதிர்த்து போராடுவது, வேலை செய்வதற்கான உரிமையை உறுதி செய்தல், ஊரக வேலை திட்டத்தில் மேம்பாடு – நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை அமல்படுத்துதல், நுண்கடன் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவது எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை உறுதி செய்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 13வது தேசிய மாநாட்டில் 26 மாநிலங்களில் இருந்து 850 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டின் நிறையவாக தலைவராக தோழர் பி கே ஸ்ரீமதி, பொதுச் செயலாளராக தோழர் மரியம் தாவாலே, பொருளாளராக தோழர்  எஸ் புஷ்பவதி  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Comment here...