மு.முத்துச் செல்வம்
உதிரம் கொடுத்து வியர்வை குளித்து அயராது
உழைக்கும் தோழரே !
நரம்பு புடைத்து கால்கள் பொசுக்கிட்டு தொடர்ந்து
உழைக்கும் தோழரே !
வயிறு வற்றி தேகம் வெளுத்து உறுதியாய்
உழைக்கும் தோழரே !
அல்லும் பகலும் உறக்கம் விடுத்து காலந்தவறாது
உழைக்கும் தோழரே !
எத்தனை இயந்திரம் வந்தாலும் உன்போல்
ஒரு இயந்திரம் உண்டோ !
எத்தனை மென்பொருள் வந்தாலும் உன்போல்
ஒரு பரம்பொருள் உண்டோ !
நீரின்றி அமையாது உலகு – தோழா என்றும்
உழைக்கும் நீயின்றி இயங்காது உலகு !
உழைப்பாளி உன்கை என்றும் உயரட்டும்..!
ஒடுக்குமுறைகள் யாவும் ஒவ்வொன்றாய் ஒழியட்டும்..!
.
மே தினத்திற்கு முன்பே வந்துள்ள அருமையான கவிதை
உழைப்பின் உன்னதம் உணர்த்தும் கவிதை சிறப்பு!
கவிதை சிறப்பு 💪