இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறைகூவல்
நமது சிறப்பு நிருபர்
2023, மே 27- 28 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 ஜூன் 27 அன்று கோரிக்கை நாளாக கடைபிடித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள், வங்கி ஊழியர்களின் பணி நிலைமைகளில் முன்னேற்றம் வேண்டி எழுப்பப்பட்டுள்ளது. வங்கிகளின் அனைத்து ஊழியர்களுக்குமான பொதுவான கோரிக்கைகளாக விளங்குகிறது. இக்கோரிக்கைகளை வென்றெடுப்பது என்பது ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களின் நலன் சார்ந்ததாக அமையும்.
வங்கி சங்கங்களின் கூட்டுப் போராட்டமாக மாறுகின்ற வரையிலும் இப்போராட்டத்தினை தனியாக நடத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கருதுகிறது.
எனவே வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு இது குறித்த கருத்துக்களை முன்வைத்து தங்களது கூட்டங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் விரும்புகின்றனர். வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் இன்று பணிச்சுமையில் சிக்கி பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாவதை நாம் பார்க்க நேரிடுகிறது. வங்கிகளை காப்பாற்றவும், அவற்றின் பொதுத்துறைத் தன்மையை பாதுகாக்கவும், வங்கி ஊழியர்களின் நலனை பாதுகாக்கவும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வைத்துள்ள கோரிக்கைகள் உட்பட இன்னும் பிற கோரிக்கைகளை உள்ளடக்கி சங்கங்களின் கூட்டமைப்பு உறுதியான நீண்ட நெடிய போராட்டத்தினை கையில் எடுக்க வேண்டும். அதுவே அனைத்து தரப்பு ஊழியர்- அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கவசமாக மாறும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.
வங்கி துறையில் அனைத்து சங்கங்களும்
“ஒற்றுமைக்கான போராட்டம்
போராட்டத்திற்கான ஒற்றுமை”
என்ற வர்க்கப் பார்வையோடு களம் காண வேண்டுமென்று எதிர்பார்ப்போம்.
கோரிக்கைகள்
- வங்கிகளின் தேவைக்கேற்ப எழுத்தர் மற்றும் கடைநிலை ஊழியர்களை பணி நியமனம் செய்திடுக
- தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை வங்கி நிரந்தரப் பணியாளர்களாக முறைப்படுத்திடுக
- வங்கி தொடர்பாளர்களை வங்கிப் நிரந்தரப் பணியாளர்களாக நியமித்திடுக
- நிரந்தர வங்கிப் பணிகளை வெளி ஆட்களுக்கு தாரை வார்க்காதே
- தொழிற்பயிற்சி ( Apprenticeship) மற்றும் ஒப்பந்த முறையில் பணிகளில் அமர்த்தாதே
- ஊழியர்களை துறை சார்ந்த சேவை நிலையை மீறி வேலை வாங்காதே
The issues highlighted by BEFI is for the wellbeing of all the employees of the bank. These issues should be made as UFBU agenda and the bank unions should go in for organisational action programme. Hope this article reignites the fire within UFBU and the demands are met.
வங்கி துறையில்அதிகரித்து வரும் காலிப்பணியிடங்கள்வேலை சுமை வேலைப்பளு தனியார் மைய முயற்சிகளை மற்றும் தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களின் நிரந்தரப்படுத்துவது நாம் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாகவே வென்று எடுக்க முடியும்.🚩🚩🚩👍👍👍