தலையங்கம்
வங்கி ஊழியர்களுக்கான சென்ற ஊதிய உயர்வு ஒப்பந்தம் 31.10.22 வுடன் முடிவுற்றுள்ளது. அடுத்த 12வது இருதரப்பு ஒப்பந்தத்திற்கான காலம் 01.11.22 முதல் துவங்குகின்றது. புதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கைப் பட்டியலை ஏற்கனவே பேச்சுவார்த்தை சங்கங்கள் தயாரித்து அளித்துள்ளன. இதன் மீது பேச்சு வார்த்தையைத் துவக்க சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக கடந்த 28.07.23 அன்று IBA விற்கும் UFBU விற்கும் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை மும்பையில் நடைபெற்றுள்ளது.
சுமுகமான சூழ்நிலையில் துவக்கப்பட்டுள்ள இந்த பேச்சு வார்த்தையில் IBA தரப்பில் வெகு துரிதமான கால இடைவெளிக்குள் இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்ய விருப்புவதாகக் கூறப்பட்டுள்ளது.. மாதத்திற்கு ஒரு முறை பேச்சுவார்த்தைக் குழு கூடவும், இடைப்பட்ட காலங்களில் துணைக் குழுக்கள் தேவையின் அடிப்படையில் கூடவும் ஆலோசனை முன் வைக்கப்பட்டது. IBA தரப்பில் பேச்சுவார்த்தை குழு மற்றும் துணைக்குழுக்களில், வங்கி நிர்வாகங்கள் தரப்பில் கலந்து கொள்பவர்கள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சென்ற ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அனைத்து வங்கிகளும் இந்த பேச்சுவார்த்தையிலும் இடம் பெற வேண்டும் என்றும் இதற்கான ஒப்புதல்களை அனைத்து வங்கிகளிடமுமிருந்து பெற IBA உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேச்சு வார்த்தை சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இருதரப்பு ஒப்பந்த பேச்சு வார்த்தை, வங்கி ஊழியர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒத்த முன்னேற்றத்துடன் விரைவில் இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு இடையில், வாரத்திற்கு 5 நாட்கள் பணி, பென்சன் திட்டத்தில் முன்னேற்றம் ஆகிய நிலுவையிலுள்ள கோரிக்கைகளும் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் எதிர் நோக்குகின்றனர்.
அடுத்த சுற்று பேச்சு வார்த்தை வரும் ஆகஸ்டு 07 அன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஊழியர்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது தலையங்கம்!
Beginning is ok after that ?
Unions should be include updation for pensioners who retired after 1.11.2017 to 31.10.2022 also