கூட்டுறவு வங்கி ஊழியர் போராட்டம்

ஹரி கிருஷ்ணன்

 தமிழ்நாட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை  ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது . மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் நகர கூட்டுறவு வங்கி ஊழியருக்கும் தனித்தனியாக இதற்காக மாநில அரசால் ஒரு குழு அமைக்கப்படும் . இக்குழு தொழிற்சங்கங்களை அழைத்து கருத்துக்களை கேட்கும். தொழிற்சங்கங்கள்   குழுவிடம் கோரிக்கை சாசனத்தை அளித்து பேச்சுவார்த்தை நடத்தும் .முடிவில் குழுவின் பரிந்துரைகள் என்னவாக இருக்கும் என்பதை வாய்மொழியாக கடைசி சுற்று பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்துவிட்டு குழுவின் அறிக்கையை பதிவாளருக்கு  குழு  சமர்ப்பிக்கும் . பதிவாளர் அலுவலகம் அறிக்கையினை பரிசீலனை செய்து  அவர்களுடைய அளவில் சிலவற்றை வெட்டிச் சுருக்கி ஆணையாக வெளியிடுவார் . இந்த பதிவாளர் உத்தரவின் அடிப்படையில் அந்தந்த மத்திய வங்கிகளிலும் நகர வங்கிகளிலும் தனித்தனியாக தொழிற்சங்கங்களுடன் தொழிற்தகராறு சட்டம் பிரிவு 12 (3)ன் கீழ் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்தந்த வங்கிகளிலும் அமல்படுத்துவார்கள். இதுதான் நடைமுறை .

  1. தற்போது நகர கூட்டுறவு வங்கிகளின் ஊதிய ஒப்பந்தம் 31. 12. 2021 தேதியுடன் முடிவடைந்துள்ளது . 01.01. 2022 முதல் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் . இதற்காக திரு பி .பாலமுருகன் கூடுதல் பதிவாளர் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, குழு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது . CBEF-TN சார்பில் கோரிக்கை சாசனம் அளிக்கப்பட்டு மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவில் அடிப்படை  ஊதியம்   மற்றும்  பஞ்சபடியின் கூட்டுத்தொகைக்கு 20% முதல் 2% வரை ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைப்பதாக தெரிவித்தார் . இதற்காக நகர கூட்டுறவு வங்கிகளை ஆறு வகையாகப் பிரித்து 20% 17% 15% 12% 10% 2% ஆகிய சதவீத ஊதிய உயர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இதை நமது சம்மேளனம் ஏற்கவில்லை. அனைத்து வங்கிகளுக்கும் 20% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வருகிறது. குழுவின் பரிந்துரை பதிவாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் அலுவலகம்  இக்கோப்பை  கிடப்பில் போட்டுள்ளது .
  • நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஒரு குழு திருமதி ரமணிதேவி கூடுதல் பதிவாளர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு  அக்குழுவும் பரிந்துரைகளை பதிவாளருக்கு சமர்ப்பித்துள்ளது . நகர வங்கிகள் ஏ பி சி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு ரூபாய் 3000 ரூபாய் 2500 ரூபாய் 2000 வழங்க பரிந்துரைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளன . இக்குழுவின் பரிந்துரைகளும் பதிவாளர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது .
  • மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 31 .12. 2020 தேதியுடன் முடிவடைந்தது .01.01.2021 முதல் புதிய ஊதிய விகிதம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் . இதற்காக வழக்கம் போல பதிவாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை சாசனத்தை சமர்ப்பித்தன . முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்து பதிவாளர் விலகிக் கொண்டு குழுவில் உறுப்பினராக இருந்த கூடுதல் பதிவாளர் திரு. வில்வ சேகரன் என்பவர் தலைவராக மாற்றப்பட்டார் . திரு. வில்வ சேகரன் தலைமையிலான குழு பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்துள்ளது. முடிவில் தொழிற்சங்கங்களிடம் அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படியின் கூடுதல் தொகையில் 10 அல்லது 12 சதவீத ஊதிய உயர்வு தான் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. இந்நிலையில் நமது தொழிற்சங்கமான  CBEF-TN

1.         மத்திய கூட்டுறவு வங்கிக்கும் நகர கூட்டுறவு வங்கிக்கும் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியின் கூடுதல் தொகையில் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் .

  • நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு வழங்குவது போலவே கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  • மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளரில் இருந்து உதவி மேலாளராக பதவி உயர்வு வழங்கும்போது கடைபிடிக்கப்படும் 3:1 என்கிற விகிதாச்சாரம்  ஒழிக்கப்பட  வேண்டும் .
  • 2016ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீனியாரிட்டி நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
  • நீண்ட நாள் கோரிக்கையானஜ்ன்ன்
  •  ”தமிழ்நாடு கூட்டுறவு வங்கி “உருவாக்கப்பட வேண்டும் . நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்தப்பட வேண்டும்.  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.  இதற்காக 

1.        21. 08. 2023 அன்று மாநிலம் முழுவதும் மாலை நேர ஆர்ப்பாட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டது .

2.         28 .08. 2023 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் தர்ணா நடத்தப்பட்டது .

சம்மேளனத்தின்  அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து வேலை நிறுத்தம் உள்பட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் மிகவும் ஆர்வமாக பங்கெடுத்து வருகின்றனர்.  கோரிக்கைகளை வென்றெடுக்கும் மன உறுதியோடு போராட்டக் களத்தில்…                  

Comment here...