எஸ். கண்ணன்
அமெரிக்காவில், அமேசான் தொழிலாளர்கள் சங்கம் வைக்கும் உரிமையை நிலை நாட்டிய போது கொண்டாட்டங்கள் எப்படி இருந்ததோ, அப்படி ஒரு கொண்டாட்டத்தை தமிழக உழைப்பாளிகள் நடத்தும் வகையில் ஒரு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் சங்கம் வைத்த காரணத்திற்காக, நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிய காரணத்திற்காக, டிஸ்மிஸ் செய்யப் பட்டனர். அது செல்லாது. அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்காத 4 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு பாதி சம்பளம், பின் சம்பளமாகவும் வழங்க வேண்டும், என்பதே தீர்ப்பு. எனவே தான் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கிய தீர்ப்பாக இதை, சி.ஐ.டி.யு கருதுகிறது.
சங்கம் வைத்தது குற்றமா?
சென்னை மெட்ரோ ரயில், ஒரு அரசு பங்கேற்புடன் கூடிய கார்பரேசன் ஆகும். இதற்கு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் ஊழியர்களில் இருந்து ஒருவர், நிர்வாக இயக்குநராக இருப்பார். முன் மாதிரி வேலை அளிப்பவராக இந்த நிறுவனம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் தொழிலாளர்கள் வேலையில் இணைந்தனர். டிப்ளமோ பொறியியல் குறைந்த பட்ச தகுதியாக கொண்ட ஊழியர்கள் தான் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இந்த எதிர் பார்ப்புகள் அனைத்தும் சில மாதங்களிலேயே பொய்த்து போனது. சுமார் 10 ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சென்னையில் இயங்கி வருகிறது.
இங்கு நியாயமாக பின்பற்ற வேண்டிய தொழிலாளர்களுக்கான உரிமைகள் பின்பற்றப்படவில்லை. தொழிலாளர்கள் முறையீடு செய்த போது அச்சுறுத்தப்பட்டனர். எனவே தங்களுக்குள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி கொள்வதே சரியான கவசமாக இருக்கும் என சி.ஐ.டியு வை நாடினர். தொழிற்சங்க உருவானது. 2018ல் தொழிற்சங்கம் துவக்கப்பட்டது. சி.ஐ.டி.யு வில் இருந்து தோழர்கள் அ. சவுந்தரராசன், கே. ஆறுமுகநயினார் மற்றும் ஆர். இளங்கோ ஆகியோர் தொடர்ந்து வழி காட்டி வந்தனர்.

சங்கம் வைத்த விவரம், மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பொதுக் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்திற்கு வழக்கம் போல் தொழிற்சங்கம் கடிதம் அனுப்பியது. அதில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பெயர் இருந்தது என்பதே பிரதான குற்றச் சாட்டு. இந்திய தொழிற் தகராறு சட்டம் 1947, பிரிவு 33 (4) அடிப்படையில் நிர்வாகிகளாக இருக்க கூடியவர்கள் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களாக அங்கீகாரம் செய்யப்பட வேண்டும். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. அதுமட்டுமல்ல, தொழிலாளர் துறையிலும் உரிய முறையில், ஆஜராகி வழக்கை நடத்த, நிர்வாகம் முன்வரவில்லை.
சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ்:
தொடர்ந்து, நிர்வாகத் தரப்பில், தொழிற்சங்க உறுப்பினர்களை தொழிற்சங்கம் வைக்கும் தகுதி அற்றவர்கள். அவர்கள் நிர்வாக பிரிவு ஊழியர்கள், எனவே தொழிற்சங்கம் வைக்க முடியாது, என வாதடியதை, தொழிற்சங்கம் எதிர் கொண்டு அவர்கள் தொழிலாளர்கள் தான், நிலையாணை சட்டம் அவர்களுக்கு பொருந்தும் என்பது உள்ளிட்டு, சி.ஐ.டி.யு தரப்பில் முன் வைக்கப் பட்டு ஒரு கட்டத்தில், தொழிற்சங்கம் வைக்கும் உரிமையை நிலை நாட்ட முடிந்தது. அதே நேரம் நிர்வாகம் குறிப்பாக சஸ்பெண்ட் செய்து, உள்விசாரணை அறிவிப்பை வெளியிட்டது.
17 தொழிலாளர்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டனர். 17 தொழிலாளர்களுக்கும் அவர்கள் பெற்ற ஊதியத்தை, பணியில் இருந்த தொழிலாளர்கள் நன்கொடை வழங்கி ஈடு செய்தனர். பணியில் இருந்த சுமார் 200 தொழிலாளர்கள் தலா 5000 ரூபாய் ஒவ்வொரு மாதமும் நன்கொடை வழங்கினர். 5 ஆண்டுகள் வழங்கிய இந்த நன்கொடை கோடி ரூபாயை தொடும் என்பது தான் தொழிற்சங்க உணர்வின் நம்பிக்கையாகவும், போராட்டத்தை முன்னெடுக்கும் துணிவையும் தந்தது.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தவிர்க்க முடியாமல் தொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தம் திணிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்தே அன்றைய தமிழக அரசு தலையீடு செய்து, வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் கோரிக்கைகளில் சில மட்டுமே நிறைவேறியது. குறிப்பாக தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் சங்க அங்கீகாரம் நிறைவேற்றப் படவில்லை.
தீர்ப்பின் சாரம்சம்:
தொழிலாளர் துறை, தொழில் தீர்ப்பாயம் கடந்து உயர் நீதிமன்றத்தை அடைந்து வழக்கு நடத்துவதற்கு, இன்றைய சூழலில் இளம் தொழிலாளர்கள் பொறுமை காப்பது எளிதான விஷயம் அல்ல. சி.ஐ.டி.யு மீதும் வழிநடத்திய தலைவர்கள் மீதும் கொண்ட நம்பிக்கை காரணமாகவே மேற்படி இளம் தொழிலாளர்கள், நீதிமன்றங்களுக்கும், இதர வழக்குகளுக்கும், தொடர்ச்சியாக நடந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களின் சி.ஐ.டி.யு சார்பில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், துண்டு பிரசுரங்கள் மூலம் தொழிலாளர்களின் நியாயத்தை விளக்கியது, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தை 6 மணி நேரம் வரை முற்றுகை இட்டது ஆகியவை மிக முக்கிய ஆதரவு இயக்கமாகும். இது போன்ற சமூக மற்றும் அரசியல் நிர்பந்தங்கள் காரணமாகவே, அடுத்தடுத்த பழி வாங்கும் செயல்களில் நிர்வாகம் ஈடுபட முடியவில்லை. இல்லையென்றால், தொழிற்சங்கம் வைக்கும் உரிமையை படுமோசமாக பறித்திருக்கும், மெட்ரோ ரயில் நிர்வாகம்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 17 தொழிலாளர்களில், அரவிந்தன், செந்தில், பரமேஸ்வரன் மற்றும் சகாதேவன் ஆகிய நால்வரைத் தவிர்த்து மற்ற அனைவரையும், வருத்தம் தெரிவிப்பதாக கூறி ஒரு கட்டத்தில் நிர்வாகம் வேலைக்கு எடுத்துக் கொள்ள சம்மதித்தது. அதே நடைமுறையை எஞ்சிய நால்வருக்கும் பின்பற்றுவதே சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்கும் என்றெல்லாம், நீதிபதி பேசிய போதும் கூட, நிர்வாகம் அசையவில்லை. பொறுமையிழந்து, வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகம் ஏற்று கொள்ளும் வகையில் அவகாசம் அளித்து ஒத்தி வைத்தது.
அவகாசத்தை நிர்வாகம் பயன்படுத்தாத நிலையிலேயே கடந்த 25 செப்டம்பர் அன்று வேலைநீக்கம் செய்யப் பட்ட 4 தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வேலையும் பின்சம்பளமும் வழங்க (பாதி சம்பளம்) உத்திரவிடப்பட்டது. iது தொழிலாளி வர்க்கம் உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டிய தீர்ப்பு. நவதாராளமய காலத்தில், அரசு நிறுவனம், தனது அரசுவழங்கும் அடிப்படை உரிமையையே காலில் போட்டு மிதிக்கும். அரசு வேடிக்கை பார்க்கும் என்பதற்கு மெட்ரோ ரயில் நிர்வாக நடவடிக்கை ஒரு உதாரணம். அதை சி.ஐ.டி.யுவும், தொழிலாளர்களும் உடைத்து நொறுக்கியதும் ஒரு ஆக சிறந்த உதாரணம்.
அருமையான கட்டுரை. நவீன தாராளமய காலங்களில் தொழிலாளி வர்க்கம் பெறக்கூடிய போராட்ட வெற்றிகளை அனைவரும் கொண்டாட வேண்டும். ரயில்வே துறையை தாண்டி வங்கி துறைக்கும் இக்கட்டுரை படிக்க இருக்கும் மற்ற துறை சார்ந்தவர்களையும் இந்த வெற்றி மகிழ்ச்சி அடைய வைக்கும். கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.
An encouraging sign for the future working class. This award is the result of the concerted efforts of the employees . As rightly pointed out this generation of workers who have little patience, every month contribution of Rs.5000 is another wonder, all show that provided the right direction and due encouragement, this set of young workers understand and fight for their rights.
Good sign.
Kudos to CITU.
Congratulations to unified steps of Metro Workers.