இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கம் உதயமானது

எஸ்.தீனதயாளன்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய அளவில் புதிதாக 2022 ஜூன் 26 அன்று பெரம்பலூரில் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 பேர் கொண்ட மாநில அளவிலான அமைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தமிழகம் முழுவதும் 3500 க்கும் மேற்பட்டோர்  வங்கி வணிகத் தொடர்பாளர்கள்  பணியாற்றி வருகின்றனர்.இவர்களை அமைப்பு ரீதியாக திரட்ட எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட வணிக தொடர்பாளர்கள் பங்கு பெற்ற  அமைப்பு மாநாடு பெரம்பலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி எஸ். தீனதயாளன் தலைமையில் நடைபெற்றது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிசினஸ் கரஸ்பாண்டன்ட் யூனியன் உதயம்

தமிழகம் முழுவதிலுமிருந்து முப்பத்தி மூன்று மாவட்டங்களின்  பிரதிநிகள் பங்கேற்ற இந்த அமைப்பு மாநாட்டில் வணிக தொடர்பாளர்களின் பணி நிலைமைகள் உட்பட பல பிரதான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இந்தியன் ஓவர்சீஸ்  வங்கி  வணிக தொடர்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிசினஸ் கரஸ்பாண்டன்ட் யூனியன் என்ற பெயரில் புதிய அமைப்பு அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.  சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ” வங்கி வணிக தொடர்பாளர்களை வஞ்சித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று ஐஓபி வங்கி நிர்வாகம் எடுத்துள்ள முடிவை ரத்து செய்ய வேண்டும்”, “ஐஓபி வணிக தொடர்பாளர்கள்  ஐஓபி  பணியாளர்களாக வங்கியின் கட்டுப்பாட்டில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்”  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

”தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணியாற்றும்போது வணிக தொடர்பாளர்களுக்கு கமிஷன் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்; இதனால் வங்கி மற்றும் வணிக தொடர்பாளர்கள் ஆகிய இருவருக்குமே பயன் இருக்காது; வணிக தொடர்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் எனவும் ஐஓபி வணிக தொடர்பாளர்கள் தொடர்ந்து ஐஓபி லேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொழில் தாவா

மேலும்சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் துறை துணை ஆணையர் அவர்களிடம் ஐஓபி நிர்வாகத்தின் “கார்ப்பரேட் நிறுவனத்திடம் வணிக தொடர்பாளர்களை ஒப்படைக்கும்” முயற்சிக்கு எதிராக தொழில்தவா  எழுப்பப்பட்டது. மத்திய தொழிலாளர் துணை ஆணையர், ஐஓபி  நிர்வாகத்தின் இம்முயற்சிக்கு தடை விதிக்கும் வகையில் ஆணை பிறப்பித்துள்ளார். கூடவே சமரச பேச்சு வார்த்தை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது சம்பந்தமாக தொடர்ச்சியான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின்  மாநில தலைவராக தோழர் எஸ். தீனதயாளன், மாநில செயலாளராக தோழர் பழனிசாமி, பொருளாளராக தோழர் லட்சுமி உள்ளிட்டு 50க்கும் மேற்பட்ட அமைப்பு குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐஓபி வணிக முகவர்களின் நலனுக்காகவும், ஒட்டுமொத்த வணிக முகவர்களின் நலனுக்காகவும், பொதுத்துறையை காக்கவும் உறுதி ஏற்றனர்.

4 comments

  1. மிக சிறந்த முயற்சி!பாராட்டுக்குறிய முயற்சி!! அணைத்து வாங்கிகளிலும் ஏற்படுத்த பட்டால் தான் முன்னேற்றங்கள் விரைவில் வரும்…

  2. வாழ்த்துக்கள் …அணிதிரட்டப்படாத ஊழியர்களை ஒருங்கிணைத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  3. அருமையான முன்னெடுப்பு. சங்கம் மென்மேலும் வளரவும், கோரிக்கைகளை வென்றெ டுக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  4. அருமையான முயற்சி. சங்கம் மென்மேலும் வளரவும் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Comment here...